வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புலி வாலை பிடித்தது போல் சந்தானத்திற்கு வந்த கஷ்டம்.. நாலா பக்கமும் சூழ்ந்து கொண்ட கெட்ட நேரம்

Actor Santhanam: நடிகர் சந்தானம் தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியவர். சந்தானத்தின் காமெடிக்காக மட்டுமே வெற்றி கண்ட படங்களும் அதிகம் இருக்கிறது. மேலும் இவரின் நகைச்சுவை காட்சிகள், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியை ஞாபகப்படுத்துவதாக கூட தமிழ் சினிமா ரசிகர்கள் சொல்லி வந்தனர். வெற்றிக்கு மேல் வெற்றி என கொடி கட்டி பறந்து வந்தார்.

காமெடியனாக கலக்கி கொண்டிருக்கும் நேரத்திலேயே திடீரென ஹீரோ களத்தில் குதித்தார் சந்தானம். ஆரம்ப காலத்தில் காமெடியை மையமாக வைத்து வரும் படங்களில் இவர் ஹீரோவாக நடித்த வரைக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. திடீரென சீரியஸான படங்கள், சிக்ஸ் பேக் என இறங்கியதிலிருந்து சந்தானத்திற்கு அடிமேல் அடியாகத்தான் விழுந்து வந்தது.

Also Read:DD Returns Movie Review- சந்தானத்தின் காமெடி ரோலர் கோஸ்டர்.. டி டி ரிட்டன்ஸ் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அதிலும் சமீப காலமாக சந்தானம் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி அடையவில்லை. அவருடைய ரசிகர்களே கலாய்க்கும் அளவிற்கு நிலைமை ரொம்பவும் மோசமானது. தொடர்ந்து பிஸ்க்கோத் , பாரிஸ் ஜெயராஜ், சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம்,குளு குளு என அடுத்தடுத்து எல்லாம் தொடர்ந்து தோல்வியை தழுவின. இருந்தாலும் தான் எடுத்த முடிவு தவறு என்பதை ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஹீரோவாக நடித்துக் கொண்டே இருந்தார்.

தற்போது சந்தானத்தின் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் என்னும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. மேலும் அடுத்து வடக்குப்பட்டி ராமசாமி என்னும் படமும் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இந்நிலையில் அடுத்தடுத்து படங்கள் தோல்வியடைந்து வருவதால் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவு புலிவால் பிடித்த கதையாக மாறிவிட்டது. மொத்த மார்க்கெட்டையும் இழந்துவிட்டார்.

Also Read:ஒரு ரூபாய் கூட குறைக்காத சந்தானம்.. டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு வாங்கிய சம்பள தொகை

இதனால் மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பி விடலாம் என முடிவெடுத்து விட்டார் சந்தானம். இருந்தாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் கண்டிப்பாக காமெடி கேரக்டர்களில் நடிப்பேன் என்று சொல்லி பூசி மொழுகி இருக்கிறார். இது மறைமுகமாக அவர் இயக்குனர்களுக்கு விடுக்கும் அழைப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் சந்தானத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் தற்போது சந்தானம், ஆர்யா, படத்தின் இயக்குனர் ராஜேஷ் முனைப்பு காட்டி வருகின்றனர். நாலா பக்கமும் வாங்கிய அடியாள் இனி காமெடியனாகவே இருந்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டார் சந்தானம்.

Also Read:முட்டி மோதியும் பிரயோஜனம் இல்ல.. பழைய ரூட்டுக்கு திரும்ப கதையை உருட்டும் சந்தானம்

Trending News