புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பேப்பர் பாய் டூ சுப்ரீம் ஸ்டார்.. 70 வயதில் சரத்குமார் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு

Sarathkumar networth: தமிழ்நாட்டில் இனி எத்தனை வருடங்கள் ஆனாலும் நாட்டாமை என்று சொன்னவுடன் சரத்குமார் ஞாபகம் தான் வரும். சூரிய வம்சம், நட்புக்காக, நாட்டாமை என ஒரு காலகட்டத்தில் தரமான ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

அதன் பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்து விட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு கிடைக்கும் கதாபாத்திரங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவருடைய கட்சியை பாஜக கட்சியுடன் சேர்த்தது, மகள் வரலட்சுமி திருமணம் எல்லாமே நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை இவருக்கு கொடுத்தது.

இன்று நாட்டாமை என்று 2k கிட்ஸ்களால் கிண்டல் செய்யப்படும் சரத்குமார் கடந்து வந்த பாதை ரொம்பவும் அதிகம். சரத்குமார் பிறந்தது டெல்லியில். அவருடைய அப்பா ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்த்தார். சரத்குமார் தன்னுடைய இருபதாவது வயதில் மிஸ்டர் மெட்ராஸ் போட்டியில் கலந்துகொண்டு பட்டம் பெற்றார்.

வேலை எதுவும் சரியாக அமையாததால் தன்னுடைய உறவினருக்கு சொந்தமான நாளிதழில் முதலில் பேப்பர் பாயாக வேலை செய்தார். அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து அதே நாளிதழில் பத்திரிகையாளராகவும் மாறினார்.

சரத்குமார் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு

அந்த சமயத்தில் தான் சாயா தேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வரலட்சுமி பிறக்கும் வரைக்கும் சரத்குமார் அந்த நாளிதழில் தான் வேலை பார்த்தார். அதன் பின்னர் சின்ன சின்ன வேஷங்கள், வில்லன் கதாபாத்திரம் என சரத்குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சூரியன் படம் தான் அவர் சோலோ ஹீரோவாக மாறுவதற்கு காரணமாக அமைந்தது. ஆக்சன் கிங் அர்ஜூனுக்கு பிறகு தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை வைத்து சினிமாவில் மிரட்டியவர் சரத்குமார். நடிகைகளோடு நிறைய கிசுகிசுகளும் இவரைப் பற்றி வந்தது.

அதன் பின்னர் சாயாதேவியுடன் ஆன விவாகரத்துக்கு பிறகு சரத்குமார் ராதிகாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். ராதிகாவுக்கும் அவருடைய கணவருக்கும் பிறந்த மகளை தன்னுடைய சொந்த மகளாகவே பாவித்து வளர்த்ததோடு கிரிக்கெட் வீரர் மிதுனுக்கு திருமணமும் செய்து வைத்தார்.

மகள் வரலட்சுமி ஆரம்பத்தில் அவருக்கு எதிராக இருந்தாலும் அதை பக்குவமாக கையாண்டு பின்னர் தன் மகளை ஆதரவு கொடுத்து தன்னோடு வைத்துக் கொண்டார். மனைவி ராதிகா, முன்னாள் மனைவி சாயா தேவியுடன் இணைந்து தன்னுடைய மகள் வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

ஜூலை 14, இன்று தன்னுடைய எழுபதாவது பிறந்தநாளை சரத்குமார் கொண்டாடுகிறார். வயது என்பது ஒரு எண்ணிக்கை தான் என தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை வைத்து நிரூபித்திருக்கிறார் சுப்ரீம் ஸ்டார். சரத்குமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 29 கோடி.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர போட்டியாளர்களில் சொத்து மதிப்பு படி முதலிடத்தில் இருந்தவர் சரத்குமாரின் மனைவி ராதிகா தான். சரத்குமார் சமீபத்திய தகவல் படி ஒரு படத்திற்கு மூன்று கோடி சம்பளமாக வாங்குகிறார்.

மனைவி ராதிகாவின் சொத்து மதிப்பு 100-120 கோடி. மேலும் ராடன் மீடியாவின் மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார் ராதிகா. சரத்குமாருக்கு எட்டு கோடியில் அசையும் சொத்துக்களும், 21 கோடியில் அசையா சொத்துக்களும் இருக்கிறது.

இந்த தம்பதிகளுக்கு சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்று இருக்கிறது.range rover, வெள்ளை நிற audi கார், benz e class, Nissan XUV,Pajeri sport car, போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்கள்.

Trending News