வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா.? லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய நாட்டாமையின் வாரிசு

Actor Sarathkumar: நாட்டாமை என்று புகழப்படும் சரத்குமார் தற்போது மிகப்பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சினிமாவில் பிஸியாக இருந்த போதிலும் தனக்கென ஒரு கட்சியை ஆரம்பித்து இவர் நடத்தி வந்தார்.

ஆனால் திடீரென அந்த கட்சியை பாஜகவுடன் அவர் இணைத்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து வெளிவரும் பல செய்திகள் அவருக்கு எதிராகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் அவர் மகள் வரலட்சுமி மீடியாக்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர் மீடியாக்களுக்கு வேறு வேலையே கிடையாதா?

என்னைப் பற்றி எப்போதோ வந்த பொய்யான செய்தியை இப்போது பரப்புவது ஏன்? நடிப்பின் மூலம் மக்களை உற்சாகப்படுத்துவது தான் எங்களுடைய வேலை அதைத்தான் செய்து வருகிறேன்.

ஆவேச லட்சுமியான வரலட்சுமி

அது மாதிரி தான் ஊடகங்களுக்கும் ஒரு தர்மம் இருக்கிறது. உண்மையான செய்திகளை தான் நீங்கள் தர வேண்டும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது.

அதை விட்டுவிட்டு என்னைப் பற்றிய தவறான தகவல்களை பரப்பாதீர்கள். நான் அமைதியாக இருப்பதால் சோர்ந்து விட்டதாக நினைக்காதீர்கள். இது போன்ற பொய் செய்திகளுக்கு வழக்கு தொடரலாம் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

இதற்கான காரணம் என்னவென்றால் கடந்த சில நாட்களாகவே அவர் குறித்து ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதில் அவருடைய பிஏ ஆதி லிங்கம் கடந்த வருடம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இது வரலட்சுமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அப்போது செய்திகள் பரவியது. அதுதான் இப்போது மீண்டும் தலை தூக்கிய நிலையில் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் சரத்குமார் மீதும் விசாரணை திரும்பும் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. அதை தடுப்பதற்காகத் தான் பாஜகவிடம் அவர் சரணடைந்தார் என்றும் கூறப்பட்டது.

இதையெல்லாம் பார்த்து டென்ஷனான வரலட்சுமி தற்போது தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

Trending News