தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக கால் பதித்து, 1991இல் இருந்து 1998 வரை முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சரவணன். இவர் பார்ப்பதற்கு விஜயகாந்த் சாயலில் இருப்பதால் மிக எளிதாக மக்களிடத்தில் பரிச்சயமானவர். பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக சரவணன் பங்கேற்றார். இவர் தற்போது பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
வைதேகி வந்தாச்சு: 1991 இல் வெளியான வைதேகி வந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சரவணன். இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ராதா பாரதி. இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக அர்ச்சனா நடித்திருந்தார்.
பொண்டாட்டி ராஜ்யம்: 1992 ஆம் ஆண்டு வெளியான பொண்டாட்டி ராஜ்யம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சரவணன். இவருக்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவா. இப்படத்தில் சித்திராவின் பாரதி கொஞ்சம் உள்ள வாயேன் என்ற டயலாக் மிகவும் ஃபேமஸ். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி.
மாமியார் வீடு: மாமியார் வீடு என்ற திரைப்படத்தை 1993 இல் கணேஷ் ராஜ் எழுதி இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் சரவணன், செல்வா, சித்தாரா, நந்தினி, தலைவாசல் விஜய், சிட்டி, பானு பிரகாஷ், குலதெய்வம் ராஜகோபால், வீரராகவன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு
இளையராஜா இசையமைத்திருந்தார்.
நந்தா: நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலா இயக்கத்தில் 2001 இல் வெளிவந்த நந்தா திரைப்படத்தில் சரவணன் நடித்திருந்தார். இப்படத்தில் சூர்யா,லைலா, ராஜ்கிரன், கருணாஸ் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சரவணன், ராஜ்கிரணின் மகன் துரை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
பருத்திவீரன்: 2007 இல் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பருத்திவீரன். படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சரவணன் நடித்த ‘சித்தப்பு’ கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்படம் முழுவதும் மதுரை சுற்று வட்டாரத்திலேயே எடுக்கப்பட்டது. பருத்திவீரன் திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.