சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அபிநயாவ பாக்கவே வருத்தமா இருந்துச்சு.. மனம் நொந்து பேசிய சசிகுமார்

Sasikumar: இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடித்த நந்தன் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதை தொடர்ந்து சசிகுமார் நிறைய சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி ஒரு சேனலில் அவர் கொடுத்த பேட்டியில் நடிகை அபிநயாவை பற்றி பேசி இருந்தார்.

அபிநயா சசிகுமார் உடன் இணைந்து நாடோடிகள் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி பட குழுவினர் பேட்டி கொடுக்கும் பொழுது தான் அபிநயாவுக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது என நம்மில் பலருக்கு தெரியும்.

அது தெரியாதவாறு அவ்வளவு சாதுரியமாக அந்தப் படத்தில் நடித்திருப்பார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அபிநயா நடித்திருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு ரிலீசான ஈசன் படத்தில் அபிநயா தான் முக்கிய கேரக்டர்.

அபிநயாவ பாக்கவே வருத்தமா இருந்துச்சு

அவ்வளவு திறமையான தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அஜித் நடித்த சூப்பர் ஹிட் அடித்த வீரம் படத்தில் அவருடைய தம்பிகளில் ஒருவருக்கு அபிநயா ஜோடியாக நடித்திருப்பார். அபிநயாவால் பேச முடியாததால் அவர் நடித்த கேரக்டர்களுக்கு எல்லாம் பின்னணி குரல் கொடுத்தது அவருடைய அம்மா தான்.

சமீபத்தில் அவருடைய அம்மா தவறிவிட்டதாக சசிகுமார் அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார். அப்போது அபிநயாவை பார்ப்பதற்கே ரொம்பவும் வருத்தமாக இருந்ததாகவும், அதன் பின்னர் அபிநயாவை இன்று வரை பார்க்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

தன்னால் முடியாத சில விஷயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திறமையான நடிப்பு மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அபிநயா. அவருக்கு தொடர்ந்து நல்ல கேரக்டர்கள் கொடுப்பதற்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முன் வர வேண்டும்.

நந்தனுக்காக கஷ்டப்பட்டு நடித்த சசிகுமார்

Trending News