திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினிமாவுக்கு மட்டும்தான் காமெடியன்.. அடி வாங்கியே சம்பாதித்ததை வைத்து பிசினஸில் ஜெயித்த செந்தில்

Actor Senthil Own Business: தமிழ் சினிமாவில் காமெடி என்ற அத்தியாயத்தை எடுத்துக் கொண்டால் அதில் எப்போதுமே கவுண்டமணி மற்றும் செந்தில் பெயர்கள் முன்னிலையில் இருக்கும். காமெடிக்காக படம் ஓடி வெற்றி பெற்றது என்றால் அது இவர்களுடைய காம்போ தான். பல முன்னணி ஹீரோக்கள் கூட கவுண்டமணி செந்தில் கால் சீட்டுக்காக காத்திருந்த கதை எல்லாம் நடந்திருக்கிறது. இதில் எப்போதுமே செந்திலுக்கு கவுண்டமணியிடம் அடி வாங்கும் கேரக்டர் மட்டுமே கொடுக்கப்படும்.

செந்தில் எப்போதுமே தன்னை தாழ்த்திக் கொண்டு தான் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமே காமெடியனாக இருந்த செந்தில் நிஜ வாழ்க்கையில் ரொம்பவும் உஷாரான பேர்வழி. இந்த சம்பாத்தியம் எல்லாம் பேர் புகழ் இருக்கும் வரைக்கும் தான் நிலைக்கும் என்பதை சரியாக புரிந்து கொண்டு, சம்பாதித்த மொத்த காசையும் சொந்த தொழிலில் போட்டு இப்போது கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறார்.

Senthil 1
Senthil 1

நடிகர் செந்தில் முழுக்க முழுக்க தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ரியல் எஸ்டேட் பிசினஸில் தான் போட்டிருக்கிறார். பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் கட்டி அதை மாத வாடகை, மற்றும் லீசுக்கு விடுவதை தான் தொழிலாக செய்து வருகிறார். மேலும் செந்தில் இப்போது பெரிய பங்களாக்கள் மற்றும் அப்பார்ட்மெண்டுகளையும் கட்டி வீடுகளாகவும், கம்பெனிகளாகவும் வாடகைக்கு விட்டு வருகிறார்.

Senthil 2
Senthil 2

ரியல் எஸ்டேட் தொழில்களையும் தாண்டி நடிகர் செந்தில் நிறைய ஏர்போர்ட்டுகளில் கார் பார்க்கிங் இடங்களை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல் செந்திலின் சொந்த ஊரில் அவருக்கு மிகப்பெரிய வீடும் இருக்கிறது. ரியல் எஸ்டேட் மற்றும் மாத வாடகை மூலம் நடிகர் செந்தில் மாதக்கணக்கில் லட்சத்தில் லாபத்தை பார்த்து வருகிறார்.

Senthil 3
Senthil 3

 

Trending News