சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அதுக்கு பேரு எச்ச.. தொகுப்பாளினியிடம் டென்ஷனான சித்தார்த், காரணம் இதுதான்

Actor Siddharth: சித்தார்த் எப்போதுமே கலகலப்பாக ஜாலியாக பேசக்கூடியவர். அதேபோல் மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடுவார். அப்படித்தான் தற்போது ஒரு கேள்விக்கு ஓப்பன் ஆக பதில் அளித்துள்ளார்.

அதன்படி சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் என்னை ஒரு சக மனிதனாக நினைத்து பேசும் பெண்களிடம் நான் பேசுவேன்.

அவர்களை நான் அக்கா, தங்கை, அம்மாவாக தான் பார்க்கிறேன். ஆனால் என்னை ஒரு ஹீரோவாக நினைத்து பேசுபவர்களிடம் மறுமுறை நான் பேசமாட்டேன் என வெளிப்படையாக கூறியிருந்தார்.

சித்தார்த்தை டென்ஷன் ஆக்கிய கேள்வி

அதை அடுத்து நண்பனின் காதலியிடம் வழிந்து பேசி இருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சித்தார்த் செம டென்ஷன் ஆகிவிட்டார்.

அதற்கு பெயர் எச்ச. அப்படி ஒரு விஷயத்தை நான் செய்யவே மாட்டேன் என்று கோபத்தோடு பதில் அளித்துள்ளார். அதை தொடர்ந்து ஏடாகூடமாக கேள்வி கேட்ட அந்த தொகுப்பாளினியும் வாயடைத்து போய்விட்டார்.

தற்போது சித்தார்த் இந்த விஷயத்தில் நேர்மையாக பதிலளித்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் இவருடைய சித்தா மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இப்போது பல வாய்ப்புகள் இவரை தேடி வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News