வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

தேசிங்கு பெரியசாமியை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த சிம்பு.. அதிரடியாய் வெளியான STR49 அப்டேட்!

STR 49: நடிகர் சிம்பு இன்று தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் நள்ளிரவு பட குழுவால் வெளியிடப்பட்டது.

சிம்புவுக்கு ரீ என்ட்ரியில் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துவிட்டன.

இந்த படங்களை ஒப்பிடும் பொழுது பத்து தல படம் டிசென்ட்டான ஹிட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக சிம்புவுக்கு வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.

STR49 அப்டேட்!

அதிரடியாய் அவருடைய 48வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்குகிறார், கமல் தயாரிக்கிறார் என பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் படத்தைப் பற்றிய எந்த செய்தியும் வெளியாகவில்லை. சிம்புவுக்கு ஆறுதல் பரிசாக கிடைத்தது தக் லைஃப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் தான்.

இந்த நிலையில் எஸ்டிஆர் 48 படத்தின் வேலைகளை கிடப்பில் போட்டு விட்டார்கள் போல. சிம்பு தன்னுடைய நாற்பத்தி ஒன்பதாவது படத்தின் மூலம் பார்க்கிங் பட இயக்குனருடன் இணைகிறார்.

இந்த படத்தை தனுஷின் இட்லி கடை படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

STR 49
STR 49

Trending News