சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிம்பு அடுத்த படம் இவர்கூடதான்.. தலைவா கொஞ்சம் கருணை காட்டுங்க.. பதட்டத்திலேயே இருக்கும் தயாரிப்பாளர்

நீண்ட காலமாக பட வாய்ப்புகள் குறைவாக வைத்திருக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தற்போது அடுத்தடுத்த படங்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறார்.

ஈஸ்வரன், மாநாடு படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த ஷெட்டியூல்களிவ் பிசியாக இருக்கும் சிம்பு. இப்போது கல்பாத்தி அகோரம் பிக்சர்ஸ் நிறுவனமான “ஏஜிஎஸ்” எண்டர்டெய்ன்மென்ட் (பல வருடங்களாக வெற்றிப்படங்களை தயாரிக்கும்) நிறுவனம்.

சமீபத்தில் தளபதியின் பிகில் படமும் ஏஜிஎஸ் தயாரிப்பு தான். பல்வேறு நடிகர்களுக்கு முதல் வாய்ப்பளித்த அந்த நிறுவனம் இப்போது லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வின் புதிய ப்ராஜக்டை தயாரிக்கிறது.

இன்று வரை பெயரிடப்படாத அந்த திரைப்படத்தை ஒரு பிரபல இயக்குனர் இயக்குகிறார். படக்குழுவின் அறிவிப்பு படி கதாநாயகி மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்கள் ஏற்கனவே ஒப்பந்தமாகிவிட்டதாகவும் விரைவில் பூஜை மற்றும் படப்பதிவு துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

maanaadu simbu
maanaadu simbu

எல்லாம் நல்லபடியாக ஆரம்பித்தாலும் நடப்பதும் படத்தை சிறப்பாக முடிப்பதும் சிம்பு கையில் தான் உள்ளது. படம் முடியிறதுக்குள்ள என்ன என்ன பஞ்சாயத்துலாம் வருதுனு பார்க்கலாம்.

Trending News