புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கமல், சூர்யா கொடுத்த தைரியம்.. பார்ட் 2 படத்திற்கு பழைய காதலியை ஜோடியாக்கும் சிம்பு

Actor Simbu: தமிழ் சினிமாவில் சமீப காலமாக பார்ட் 2 மற்றும், நன்றாக ஓடி சூப்பர் ஹிட் அடித்த படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்வது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய பாபா படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீலீஸ் செய்தார். அதேபோன்று உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய வெற்றிப்படமான வேட்டையாடு விளையாடு படத்தை மீண்டும் ரீலீஸ் செய்தார்.

இந்த படம் இரண்டாவது முறையும் வசூலில் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இந்த வாரம் நடிகர் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படம் தெலுங்கு வெர்ஷன் ரி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று இருக்கிறது. அதே போன்று ஒரு சில படங்களின் இரண்டாம் பாகங்களும் ரெடியாகி கொண்டிருக்கின்றன. இந்தியன் 2, சந்திரமுகி 2 போன்ற படங்கள் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

Also Read:வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸ் பார்த்து பேராசையுடன் சிம்பு.. 18 வருடத்திற்கு பிறகு ரகடான படத்தை வெளியிடும் எஸ்டிஆர்

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இந்த புதிய ட்ரெண்டை நோக்கி போய் கொண்டிருக்கும் நேரத்தில், சமீபத்தில் ரி என்ட்ரி கொடுத்து, விட்ட இடத்தை பிடித்த நடிகர் சிம்பு, அவருடைய படத்தையும் இரண்டாவது பார்ட்டாக எடுக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த அவருடைய ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

இயக்குனர் துரை இயக்கத்தில், சிம்பு நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தொட்டி ஜெயா. இது கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த சிம்பு முதன் முறையாக அதிரடி ஆக்சனில் களம் இறங்கியது இந்த படத்தில் தான். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு வசூலிலும் வெற்றி பெற்றது.

Also Read:சந்தானத்தை ஓரங்கட்ட பார்த்த கவுண்டமணி.. சிம்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

இந்த படத்தை தான் தற்போது நடிகர் சிம்பு இரண்டாம் பாகமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். தொட்டி ஜெயா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கோபிகா நடித்திருந்தார். இந்த பாகத்தில் நடிகை நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே தொட்டி ஜெயா படத்தில் நடிக்க வேண்டியது நயன் தான்.

அப்போது மிஸ் ஆனதால், இப்போது இரண்டாவது பாகத்தில் நடிக்க வைக்க பிளான் போடப்பட்டு இருக்கிறது. நயன்தாராவுக்கும் சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் அவர் இதில் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படி நயன்தாரா ஒத்துக்கொள்ளவில்லை என்றால் த்ரிஷா இந்த படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:எனக்கும் நயன்தாராவுக்கும் எப்படிப்பட்ட உறவு தெரியுமா.? ஓபன் ஆக போட்டு உடைத்த சந்தானம்

Trending News