திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

செம்ம பிஸி, அடுத்தடுத்து சிம்பு உறுதி செய்த 6 படங்கள்.. 2025 வரை என்னோட ராஜ்ஜியம்தான்

சிம்புவுக்கு கொரோனா லாக் டவுனுக்கு பிறகு நல்ல அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். சினிமாவில் தனக்கு கிடைத்த மறுவாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு. இவர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இப்போது சிம்பு அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து சிம்பு உறுதி செய்த 6 படங்கள்,

பத்துதல: ‘முஃப்தி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்துதல. இந்த படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.

Also Read: ஏமாற்றிய சிம்பு.. அதள பாதாளத்தில் தள்ளி விடப்பட்ட ஹன்சிகா

விண்ணை தாண்டி வருவாயா: சிம்புவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் அது விண்ணை தாண்டி வருவாயா. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், AR ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

கொரோனா குமார்: ரௌத்திரம், காஷ்மோரா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் கொரோனா குமார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Also Read: சிம்பு ரசிகர் செய்த சேட்டை.. ஓவர் நக்கல் இல்லையா என சிரித்த தனுஷ் ஃபேன்ஸ்

சுதா கொங்கரா – சிம்பு: கே ஜி எஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன், சுதா கொங்கரா இணையும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

வெந்து தணிந்தது காடு 2: இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கௌதம் எடுக்க இருக்கிறார். இது இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் படமாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

மாநாடு 2: சிம்புவின் கம்பேக்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த முதல் படம் மாநாடு. டைம் லூப்பை மையமாக கொண்ட இந்த படத்தில் எஸ் ஜெ சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தகவலை அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Also Read: உருகி உருகி காதலித்த 8 சினிமா பிரபலங்கள்.. 4 பேரை வலைத்து போட்ட சிம்பு

Trending News