திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மற்ற நடிகர்களை விட சிவாஜியின் புகழ் நிலைத்து நிற்க இதுதான் காரணம்.. எந்த நடிகர்களிடமும் இல்லாத பழக்கவழக்கம்

Actor Sivaji Ganesan: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவில் தனக்கென்று எந்த இமேஜையும் வைத்து கொள்ளாமல் கொடுக்கும் கதாபாத்திரங்களை மனப்பூர்வமாக ஏற்று நடிக்க கூடியவர். தெய்வ மகன் போன்ற படத்திலும் அவரால் நடிக்க முடியும், பாகப்பிரிவினை போன்ற படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழவும் முடியும். அவருடைய சினிமா வாழ்க்கையில் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று கூட சொல்லலாம்.

எந்த அளவுக்கு நடிகராக சிவாஜி ஜெயித்து காட்டினாரோ, அதே அளவுக்கு நல்ல மனிதனாகவும் வாழ்ந்து காட்டினார். தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட பண உதவி செய்ய கூடியவர. ஆனால் மற்ற நடிகர்களை போல் அவர் செய்யும் உதவி வெளியில் தெரிய வேண்டும் என ஒரு போதும் நினைக்க மாட்டார்.

Also Read:தமிழ் சினிமாவிற்கு இதுவரை கிடைக்காத மாற்று நடிகர்.. சிவாஜியையே வளர்த்து விட்ட ஜாம்பவான்

எத்தனையோ படங்கள் நடித்து, பண செல்வாக்கு இருந்தாலும் வீட்டு சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாராம் சிவாஜி. அதே போன்று எப்போதுமே தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவாராம். நடிகர் நாகேஷ் போன்ற முக்கிய நடிகர்கள் நடு இரவில் வீட்டிற்கு வந்தாலும், அப்போது கூட தோசை ஊற்றி, தேங்காய் சட்னி வைக்க சொல்லி சாப்பாடு கொடுப்பாராம். அவர்களுடனே அமர்ந்து பேசி, தரையில் பாய் போட்டு தூங்குவாராம்.

அதே போன்று தான் நடித்து கொண்டிருந்த காலம் வரைக்கும், படப்பிடிப்புக்கு 1 மணி நேரத்திற்கு முன்பே சென்று விடும் பழக்கமுடையவர் சிவாஜி. அவரை பார்த்து நிறைய நடிகர்கள் இந்த பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். மேலும் தினமும் வீட்டில் அசைவ உணவு சமைக்க சொல்லி , 10 பேருக்கான சாப்பாட்டுடன் தான் செல்வாராம். எல்லாருடனும் சாப்பாடை பகிர்ந்து சாப்பிடுவாராம்.

Also Read:ஓவர் ஆக்ட்டிங் செய்த நடிகர்.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கண்டித்த சிவாஜி

அதே போன்று யார் உதவி என்று சிவாஜியிடம் சென்றாலும் யோசிக்காமல் உதவி செய்ய கூடியவர் இவர். மேலும் உதவி பெறுபவர்களிடம் இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம், அது தான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி என்று கேட்டு கொள்வாராம். இதனாலேயே சிவாஜி செய்த பல உதவிகள் வெளியில் தெரியாமலேயே போயிருக்கிறது.

சிவாஜிக்கு இருந்து பெயர் மற்றும் புகழுக்கு அவரை தேடி நிறைய பதவிகள் வந்திருக்கின்றன. அவர் நினைத்திருந்தால் தமிழக அரசியலில் எப்படிபட்ட பதவியையும் கேட்டு வாங்கியிருக்கலாம். ஆனால் சிவாஜி அதற்கு எல்லாம் ஆசை படவே இல்லையாம். என்றுமே எளிமையாக வாழவே விரும்பியிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

Also Read:சிவாஜியை பார்த்து பயந்து நடுங்கிய நடிகர்.. 11 முறை பாத்ரூம் போன சம்பவம்

Trending News