விஜய் டிவியின் பிரபலமான சிவகார்த்திகேயன், தொடக்கத்தில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாகவும் தனது சினிமா பயணத்தை தொடங்கி, தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துவரும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்காக அவருடைய ரசிகர்கள் வெகுநாட்களாக காத்துள்ளனர்.
தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்ட நிலையில், விரைவில் டாக்டர் படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரகுல் பிரீத் சிங் உடன் சிவகார்த்திகேயன் நடித்த ஏலியன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில்,
விரைவில் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் சிவகார்த்திகேயன் ‘டான்’ எனும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளாக அனு எனும் வெள்ளைப் புலியை தத்தெடுத்து பராமரிப்பு செலவினை சிவகார்த்திகேயன் செலுத்தி வருகிறார்.
இந்த மகத்தான செயலின் தொடர்ச்சியாக, தற்போது மீண்டும் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள பெண் யானை பிராக்கிரிதியையும், ஆண் சிங்கமான விஷ்ணுவையும் ஆறு மாத காலத்திற்கு சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
‘கொரோனா பரவலின் காரணமாக உயிரியல் பூங்காக்கள் அனைத்தும் பல மாத காலமாக மூடப்பட்ட நிலையில், தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. ஆகையால் அழிந்து வரும் உயிரினங்களை பராமரிக்க பிரபலங்கள் பலரும் முன் வந்ததால் வனவிலங்குகளை பாதுகாக்க முடிகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் 3 வனவிலங்குகளை தத்தெடுத்தது பாராட்டுக்குரியது’ என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை அறிந்த ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு சமூக வலை தளங்களின் வாயிலாக தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.