வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

Actor Sivakarthikeyan did not take any remuneration for Ayalaan: தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் முன்னுக்கு வந்த சிவகார்த்திகேயன், ஏன் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார் என்ற கேள்வி பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ஆர் ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரகுல் பிரீத்தி சிங் பானுப்ரியா யோகி பாபு கருணாகரன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பொங்கல் ரிலீஸ் காக காத்திருக்கும் படம் அயலான்.

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை கோரமண்டல் தாஜ் ஹோட்டலில் சில முக்கிய புள்ளிகளை மட்டுமே அழைத்து சிம்பிளாக நடைபெற்றது. இடம் சின்னதா இருந்தாலும் சத்தம் பெருசா இருக்கும் என்று மாஸ் காட்டி இருந்தார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் பல புதுமைகளை புகுத்தும் நோக்கத்தோடு வந்த அயலான் காலங்கள் கடக்க கடக்க புதுமைகள் பழமைகளாக போனது ஆம் அயலான் படம் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆன நிலையில் இதில்  முதன் முறையாக உபயோகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்கள் யாவும் பழசாகி போனது.

Also Read: குதிரை மாதிரி விழுந்து எழுந்திருத்து ஓடும் 5 நடிகர்கள்.. கோடிகளில் கடன் இருந்தும் அசராத சிவகார்த்திகேயன்

குழந்தைகளுக்குப் பிடித்தமான ஏலியன் ஜனர் என்பதால் ஏலியன் வரும் ஒவ்வொரு சீனையும் மூன்று தடவை சூட் பண்ணினார்களாம். படத்திற்காக அனைவரும் ரொம்ப மெனக்கெடுத்து பண்ணினார்களாம் இதில் பட்ஜெட் பிராப்ளம் வேறு. படத்தின் உருவாக்கத்தை விரைவுப்படுத்தும் பொருட்டு சிவகார்த்திகேயன் எந்த சம்பளமும் முன்பணமாக வாங்காமல் ஒத்துக் கொண்டு நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் சமீபத்தில் அடித்த பேட்டியில் நடிகர் ஒருவர் இந்த படத்திற்கு நீங்கள் சம்பளமே வாங்கவில்லையா? என்று கேட்க, படம் வந்தா மட்டும் போதும் தமிழ் மக்களுக்கு புதுசா எதையாவது கொடுக்கணும்னு நினைக்கிறோம் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார் சிவகார்த்திகேயன்.

இந்த பில்டப்புகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் தந்திரம் என்னவென்றால், படம் ரிலீஸ் ஆனால் போதும் என்று பெருந்தன்மையாக காட்டிவிட்டு இப்படத்தின் வெற்றியின் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்துவதோடு அன்றி தலைவரைப் போல் பகுதி வாதியாக லாபத்தில் பங்கு கேட்கலாம் என்று ஸ்கெட்ச் போட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

Also Read:தனுசுக்கே தண்ணி காட்ட வரும் சிவகார்த்திகேயன்.. கேப்டனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

Trending News