வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூர்யா, கார்த்திக் போல சிவகார்த்திகேயன் செய்த நிதி உதவி.. இதுல இப்படி ஒரு சூழ்ச்சி இருக்கா!

Sivakarthikeyan gave money to udhayanithi stalin for chennai flood: டிசம்பர் தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தில் சிக்கியிருந்தது சென்னை. மிக்ஜாம் புயல் கரையை கடந்த பின்னும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இன்றளவும் நிலைமையை சரி செய்ய முடியாமல் தூய்மை பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

மக்கள் ஆங்காங்கே உணவுக்காகவும் சுத்தமான நீர், பால் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமலும் அவதிப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க மழையினால் சுகாதாரம் சீர்குலைந்து போனது. பலரும் ஆளும் வர்க்கத்தினரை ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்லி வந்தனர்.

மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி வராத நிலையில் மிக்ஜாம் புயலின் சேதங்களை சரி செய்ய முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன என்ற அறிவிப்பை அடுத்து பலரும் நன்கொடை கொடுக்க முன்வந்துள்ளனர்.

Also read:  ரஜினி சினிமாவில் வளர்த்து விட ஆசைப்பட்ட 5 நடிகர்கள்.. சிஷ்யனாகவே மாறிய சிவகார்த்திகேயன்

முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். திரை பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியை அழித்து வருகின்றனர். பார்கிங் ஹீரோ ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் கொடுத்தும் அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி  புகைப்படம் எடுத்து உள்ளார்.

இப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனின் இச்செயலுக்கு பாராட்டு வழங்கி வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் முதன் முதலில் உதவிக்கரம் நீட்டிய சூர்யா, கார்த்தியை போல் தாமாகவே உதவி இருக்கலாமே முதலமைச்சர் கேட்கும் வரை காத்திருக்க வேண்டாமே என்று கலாய்த்து வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பருத்திவீரன் பிரச்சனையை மூடி மறைப்பதற்காகவே கார்த்திக், சூர்யா நிதி உதவி மற்றும் இமான் பிரச்சனையை மறைப்பதற்காக சிவகார்த்திகேயன் நிதி உதவி அளித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தற்போது புரளியை கிளப்பி வருகின்றனர். எது எப்படியோ சென்னைக்கு நல்லது நடந்தால் சரி. விரைவில் சென்னை, சிங்கார சென்னையாக மாற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Also read: புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

Trending News