வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரின்ஸ் படத்தால் தெலுங்கு பக்கம் சாய்ந்த சிவகார்த்திகேயன்.. ஏற்றிவிட்ட ஏணியை வாரி விடுவதா?

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் பிரமோஷன் இப்போது பயங்கரமாக நடந்து வருகிறது. நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயனின் நடவடிக்கை இப்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது மாவீரன் படத்திற்காக தமிழில் எந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தெலுங்கில் நிறைய மீடியாவுக்கு தொடர்ந்து சிவகார்த்திகேயன் பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் மாவீரன் படம் தமிழில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தான் உருவாகி இருக்கிறது.

Also Read : சிவகார்த்திகேயனுக்காக உதயநிதி போட்ட ட்வீட்.. மாவீரனுக்கு வந்த முதல் விமர்சனம்

ஆனால் தெலுங்கில் பிரமோஷன் செய்வதற்கான காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதாவது இந்த படத்திற்கு முன்னதாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தெலுங்கு இயக்குனருடன் பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனாலும் பிரின்ஸ் படத்தால் ஒரேடியாக தெலுங்கு பக்கம் சாய்ந்து விட்டார் சிவகார்த்திகேயன். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் மாவீரன் பிரமோஷனுக்காக மலேசியா சென்று இருந்தார். அங்கு இப்படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸை உடைத்திருக்கிறார். அதாவது மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

Also Read : சின்ன வயசுலயே மாமா பொண்ணுக்கு ரூட் விட்ட சிவகார்த்திகேயன்.. ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ

தமிழில் எந்த மீடியாக்களிலும் சொல்லாத இந்த மிகப்பெரிய விஷயத்தை மலேசியா மக்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். பொதுவாக மலேசியாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் தான் படத்தை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. பெரும் ரசிகர் கூட்டம் இருக்கும் தமிழ் ரசிகர்களை சிவகார்த்திகேயன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் சின்னதிரையில் இருந்த சிவகார்த்திகேயன் வெள்ளிதிரைக்கு வருவதற்கு அவரது கடின உழைப்பு நிச்சயம் கை கொடுத்தது. அதைத் தாண்டி அவருக்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்த நிலையில் இப்போது ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்துவது போல் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன் என பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

Also Read : உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

Trending News