வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. டாப் கியரில் எகிரும் மார்க்கெட்

டான் திரைப்பட வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மடோனா அஸ்வின் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

பொதுவாக சிவகார்த்திகேயன் சீரியஸான கதைக்களத்தை கையில் எடுப்பது இல்லை. மக்களும் அவரிடம் காமெடி படங்களை தான் எதிர்பார்ப்பார்கள். இருந்தாலும் அவர் தேர்ந்தெடுத்த ஒரு சில சீரியஸ் கதைகளும் வெற்றி பெற்று இருக்கின்றன. மேலும் சிவகார்த்திகேயன் விளையாட்டு தொடர்பாக மான் கராத்தே, எதிர் நீச்சல் , கனா திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

Also Read: விஜய்யை வைத்து நன்றாக சம்பாதித்த சிவகார்த்திகேயன்.. பாவம் இது தளபதிக்கே தெரியாது!

இப்போது சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க விளையாட்டு சம்மந்தப்பட்ட திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இது சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் பையோபிக் படம் ஆகும். கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை கதையில் தான் சிவா நடிக்கிறார்.

தமிழகத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த நடராஜன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பின் நண்பனின் உதவியால் சென்னைக்கு வந்து டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, TNPL கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி, இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் வீரராக இருக்கிறார். இவர் தமிழ் நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கிறார்.

Also Read: சிவகார்த்திகேயன் படத்துல நடிச்சது தப்பா போச்சு.. எல்லாரும் அதுக்கே கூப்பிடறாங்க என புலம்பும் நடிகை

பாலிவுட் உலகத்தில் இது போன்ற பையோபிக்குகள் அதிகமாக எடுக்கப்படுகின்றன. சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கோப்பை வாங்கி கொடுத்த மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை கூட படமாகி இருக்கிறது. இது தான் முதன் முறையாக ஒரு தமிழக வீரரின் வாழ்க்கை கதை படமாகுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஒரு மாஸ் ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்நிலையில் இப்போது இவர் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் பையோபிக்கில் நடிப்பது இன்னும் அவருடைய மார்க்கெட்டை டாப்பில் கொண்டு போய் இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பிரின்ஸ், அயலான் திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

Also Read: பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க போகும் சிவகார்த்திகேயன்.. வயிற்றெரிச்சலில் வாரிசு நடிகர்கள்

Trending News