திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

3 வருட கேப், தளபதி இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் போட்ட பலே திட்டம்.. அதிரடியாக தொடங்கப்பட்ட SK21

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் டிரைலர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி சங்கர் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

படம் ரிலீஸ் ஆக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படக்குழு பிரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இறங்கி இருக்கிறது. சிவாவும் இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக களம் இறங்கி இருக்கிறார். அதே சமயத்தில் அவருடைய 21வது படம், இன்னும் பெயரிடப்படாத SK21 என்று அடையாளப்படுத்தப்படும் திரைப்படத்தின் அப்டேட் சுடச்சுட வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Also Read:11 வருட கதையை தூசி தட்டும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. கிரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்.?

சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ரங்கூன் என்னும் திரைப்படத்தை இயக்கியவர். மேலும் இந்த படத்தை தயாரிப்பது உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல்  பிலிம்ஸ் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும் இந்த படத்தில் சாய் பல்லவி சிவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ராகுல் போஸ் என்பவர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார். கமலஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் தான் இந்த ராகுல். அந்தப் படத்திலேயே தன்னுடைய முக பாவனை மற்றும் வித்தியாசமான குரலால் மிரட்டி இருப்பார் இவர். தற்போது இவரை சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு வில்லனாக லாக் செய்து இருக்கிறது படக்குழு. இந்த படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

Also Read:சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

லியோ திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது சிவகார்த்திகேயனின் படக்குழு காஷ்மீர் சென்று இருக்கிறது. மாவீரன் படத்தின் பிரமோஷன் வேலைகள் முடிந்த பிறகு சிவா காஷ்மீரில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த படத்தில் அவர் ராணுவ வீரராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டாக்டர், டான், பிரின்ஸ் என அடுத்தடுத்து ஒரு ஜாலி மூடில் படம் கொடுத்துக் கொண்டிருந்த இவர் தற்போது இது போன்ற சீரியஸ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் சிவா தான் அடுத்த ரஜினி, ஏன் ரஜினியே சிவா தான் என்று ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பேச்சு எழுந்து கொண்டிருந்த நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் சிவாவை அடுத்த ரஜினி என்று சொல்லி சுற்றி இருப்பவர்கள் ஏற்றிவிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் பரபரப்பாக வெளியாகி இருக்கிறது.

Also Read:சிவகார்த்திகேயன் ஒரு குட்டி ரஜினி.. மேடையில் சொம்படிக்கும் ரஜினி பட வில்லி

- Advertisement -

Trending News