செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

1200 கோடி வசூல்னா சும்மாவா.! பிரம்மாண்ட கூட்டணிக்கு அடி போட்ட சிவகார்த்திகேயன் 

Actor Sivakarthikeyan supports his friend director atlee for Jawan: எல்லோரோட சின்ன மனசும் இந்த பாராட்டுக்கு தானே ஏங்கிட்டு இருக்கு! தனக்கு தெரிஞ்சவங்களோட வளர்ச்சியை பார்க்கும் மனிதர்கள் உண்மையிலேயே அவர்களை மனசார பாராட்டுகிறார்களா?  நண்டு கதையில் உள்ள மாதிரி தமிழனை தமிழன் எப்பவும் ஏற்றி விடமாட்டான் என்ற பொதுமொழி போல இன்றும் நடைமுறையில் இருந்து வரும் சினிமா பாலிடிக்ஸ் பற்றி சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.

முகபுத்தகம் என்ற குறும்படத்தில் ஆரம்பித்த சிவகார்த்திகேயன் மற்றும் அட்லீயின் நட்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இயக்குனர் சங்கரிடம் எந்திரன், நண்பன் ஆகியவற்றின் உதவி இயக்குனராக பணிபுரிந்து  ராஜா ராணியின் மூலம்  தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட  ராஜா ராணி வசூலில் பல மடங்கு லாபம் சம்பாதித்ததை  அடுத்து அனைவரின் கவனத்திற்குரிய இயக்குனராக அட்லீ மாறினார். தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி வைத்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து கோலிவுட்டை தெறிக்க விட்டார்.

Also read: சிவகார்த்திகேயனின் கண்ணீரைத் துடைக்க போகும் சாமி.. அயலானுக்காக தேடிப் போய் சரண்டர் ஆன சம்பவம்

பாக்ஸ் ஆபிஸ் வசூல் மன்னன் ஆக உருவெடுத்த அட்லீயின் பார்வை பாலிவுட் மீது பட, முதல் படமே ஷாருக்கானுடன் ஜவான். இப்படத்தின் வசூல் ஆனது இந்தியாவில் எடுத்த படங்களிலேயே உச்சமாக உலக அளவில் 1200 கோடி என சாதனை புரிந்தது.

ஜவானின் இந்த அதிரடியான வசூலை பற்றி கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வரும் செல்லா குட்டி அட்லீயை பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் கூறியது கவனிக்கத்தக்கதாக உள்ளது. 1200 கோடி வசூல்னா சும்மாவாங்க.. என்று ஆரம்பித்தவர்,

“தமிழ்ல இருந்து போயி பாலிவுட்ல இவ்வளவு பெரிய சாதனைங்கிறது ஒரு சாதாரண விஷயம் இல்லை இதை யாருமே நாம கொண்டாடல” ஆனா படம் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்குது அப்படின்னு சொல்லி, படத்தை நம்ம ஆளுங்க ரொம்ப கிரிட்டிசைஸ் பண்றாங்க. நண்பேண்டா!  என்று கொதித்து எழுந்தார் சிவகார்த்திகேயன்.

ஏற்கனவே ராஜா ராணி கை விட்டு போயிருக்கும்  என்கிற கவலைல இருந்திருப்பார் போல இப்போது தமிழனை கொண்டாட சொல்லி நட்புடன் கொடி உயர்த்தி உள்ளார் சிவகார்த்திகேயன். காலம் நேரம் கூடி வந்தால் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி என்று சொல்லிஇருந்தார் அட்லீ. எஸ் கே 21க்கு பின் இருவரும்  இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்

Also read:  கோலிவுட்ல அறிமுகமாகும் பிரபல இந்தி இயக்குனர்.. எல்லாம் நம்ம அட்லீ போட்ட பிள்ளையார் சுழி தான்

Trending News