செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சர்ச்சையிலும் சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கும் 6 படங்கள்.. ரஜினியுடன் கைகோர்க்கும் சிஷ்யன்

Sivakarthikeyan Upcoming Movies: சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகர்கள், நடிகைகள் மீது ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பி விட்டால் அவர்களுடைய மார்க்கெட் மொத்தமாக சரிந்து விடும். அப்படித்தான் சிவகார்த்திகேயனை பற்றி கசப்பான சம்பவம் ஒன்று அவருடைய மார்க்கெட்டை சரிக்கும் விதமாக வெளியானது. தன்னை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு வார்த்தையால் பதிலடி கொடுப்பதை விட தன்னுடைய வெற்றியை வைத்து பதிலடி கொடுக்க முடிவு செய்து இருக்கிறார் சிவா. அந்த வெற்றிக்காக அவருடைய கைவசம் இருக்கும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கும் 6 படங்கள்

அயலான்: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் படம் அயலான் பொங்கலுக்கு ரிலீசாவது உறுதியென சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளிவர இருக்கிறது. சமீபத்தில் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு நட்சத்திர ஓட்டலில் ரொம்ப சிம்பிளாக நடந்து முடிந்திருக்கிறது.

SK 21: சிவகார்த்திகேயன், நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் தன்னுடைய 21 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இது ஒரு ராணுவ வீரரின் பயோபிக் கதை ஆகும். இந்த படத்தில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Also Read:மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை.. சம்பளம் கொடுக்க துப்பு இல்ல, சிவகார்த்திகேயன் கூட்டாளியின் சர்ச்சை பேச்சு

தலைவர் 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயனை திரையில் பார்க்க வேண்டும் என்பது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அதை தலைவர் 171 படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் நிறைவேற்ற இருக்கிறார். ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைகிறார் சிவா.

SK 23: தமிழில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திற்கு பிறகு, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்து சிவகார்த்திகேயனை இயக்க இருக்கிறார். என்.வி. பிரசாத் தயாரிக்கும் இந்த படம் சிவகார்த்திகேயனின் 23 வது படமாகும். சீதாராமம் படத்தின் மூலம் பெரிய அளவில் ரீச் அடைந்த மிருணாள் தாகூர் தான் இந்த படத்தில் சிவா உடன் ஜோடியாக நடிக்கிறார். எஸ் கே 23 படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கிறது.

SK 24: சிவகார்த்திகேயன் அடுத்து தன்னுடைய 24 ஆவது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். வெங்கட் பிரபு தற்போது தளபதி 68 படத்தில் படு பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் ஆரம்பித்த போதே, அடுத்து வெங்கட் பிரபு இயக்க இருப்பது சிவகார்த்திகேயனை தான் என்ற தகவல் வெளியானது.

SK 25: அயலான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், இயக்குனர் ராம்குமாருக்கும் அந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இயக்குனர் ராம்குமார் தொடர்ந்து தான் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

Also Read:அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

Trending News