வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஓவர் பில்டப் கொடுக்கும் சிவகார்த்திகேயன்.. இது எல்லாம் எங்க போய் முடிய போகுதோ!

Sivakarthikeyan: ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பது ரசிகர்களின் கையில் தான் இருக்கிறதே தவிர பட குழுவால் எப்போதுமே கணித்து விட முடியாது. இது புரியாமல் சில நேரங்களில் நடிகர்கள் படத்திற்கு ஓவராக பில்டப் கொடுத்து விடுவார்கள். அந்த பில்டப்பினால் படத்தின் மீது ஓவர் ஹைப் ஏறி திரைக்கதை அதை நிவர்த்தி செய்ய முடியாமல் போய் நிறைய படங்கள் தோற்றுப் போயிருக்கின்றன.

ரிலீசுக்கு முன்பே பில்டப்புக்கு மேல் பில்டப் ஏற்றியதால் ஃபிளாப்பான படங்கள் நிறைய இருக்கின்றன. சமீபத்தில் ரிலீஸ் ஆன கேப்டன் மில்லர் கூட இந்த லிஸ்டில் ஒன்றுதான். லால் சலாம் பிரமோஷன் இன்டர்வியூவின் போது கூட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒய் திஸ் கொலவெறி பாடல் ஏற்றிய ஹைப் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று சொன்னதை கூட இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதைத்தான் கிராமப்புறங்களில் கோழி ஒரு முட்டையிட, ஊரெல்லாம் கொக்கரிக்கும் என்று சொல்வார்கள். இப்போது சிவகார்த்திகேயனின் கதையும் அப்படித்தான் இருக்கிறது. சிவகார்த்திகேயன் சமீப காலமாக ஒரு டீசன்டான ஹிட் படங்களை கொடுத்து பெயரை காப்பாற்றி வருகிறார். அதை அசைத்துப் பார்க்கும் விதத்தில் இப்போது ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

Also Read:சிவகார்த்திகேயனுக்கு வசூலை அள்ளிக் கொடுத்த 5 படங்கள்.. வெளிப்படையாக சொன்ன உதயநிதி

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமலஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் எஸ்கே 21 என்று தான் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வெளியிட இருக்கிறார்கள்.

ஓவர் பில்டப் கொடுக்கும் சிவகார்த்திகேயன்

பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால், பிப்ரவரி 16ஆம் தேதியே இந்த படத்தின் டைட்டில் வெளியாக இருக்கிறது. இந்த டைட்டில் கார்டு அறிவிப்புக்கு படக்குழு ஒரு டீசரை வெளியிட்டு இருக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து தன்னை தயார்படுத்திக் கொள்ளும் விதத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த வீடியோ அடடே! என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் இல்லை. அவர் சாதாரணமாக உடற்பயிற்சி செய்வது தான் காட்டப்படுகிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதற்காக அவர் தன்னுடைய உடல் எடையை கணக்கச்சிதமாக பொருத்தி இருக்கிறார். டைட்டில் கார்டுக்கு டீசர் வெளியிட்டு படத்திற்கு பில்டப்பை ஏற்றி, அதுவே படத்தின் மைனஸ் ஆகி விடாமல் இருந்தால் சரிதான்.

Also Read:பிப்ரவரி 9 ஓடிடியில் ரிலீஸாகும் 14 படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் தனுஷ், சிவகார்த்திகேயன்

Trending News