யார் வேணா என்ன வேணா ஆகலாம்.. எதிர்நீச்சல் போட்டு சாதித்த சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு

Sivakarthikeyan’s Networth: ஒரு காமெடியனாகத்தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் இன்று அசுர வளர்ச்சியடைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக சாதித்து காட்டியிருக்கிறார். மெரினாவில் தொடங்கிய இவருடைய பயணம் தற்போது அயலான் வரை விஸ்வரூப வெற்றி கண்டுள்ளது.

அடுத்தடுத்து பெரிய பெரிய ப்ராஜெக்ட்டுகளில் கமிட்டாகி வரும் சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இதன் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

இப்படி பிஸியாக இருக்கும் எஸ் கே இன்று தன்னுடைய 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆரம்பத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் நடிக்க வந்த இவர் தற்போது 35 கோடி வாங்கும் அளவுக்கு வந்திருக்கிறார்.

Also read: விடாமல் துரத்தும் ஏழரைச் சனி.. சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

இதற்கு முக்கிய காரணம் அவருடைய திறமையும், உழைப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனாலேயே இவருடைய படங்கள் 100 கோடிக்கு குறையாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் இவருடைய சொத்து மதிப்பு பற்றிய முழு விவரத்தை இங்கு காணலாம்.

சென்னை வளசரவாக்கத்தில் பிரம்மாண்ட பங்களாவில் வசித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு ஈசிஆரில் சொகுசு பங்களாவும் இருக்கிறது. அதேபோன்று சொந்த ஊரிலும் இவருக்கு ஆடம்பர வீடு உள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை உட்பட பல இடங்களில் இவருக்கு சொந்தமாக சொத்துக்கள் இருக்கிறது.

மேலும் மினி கூப்பர், பிஎம்டபிள்யூ, ஆடி கார் உள்ளிட்ட ரக ரகமான கார்களும் இவர் வசம் இருக்கிறது. அதேபோல் நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் இவர் அதன் மூலமும் கல்லாகட்டி வருகிறார். இப்படி எதிர்நீச்சல் போட்டு சாதித்து ஒரு ரோல் மாடலாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Also read: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. ரத்தம் தெறிக்கும் சிவகார்த்திகேயனின் SK21 டைட்டில் டீசர்