செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நான் கஷ்டப்பட்டேன், இவங்க சொகுசா வாழ்றாங்க.. மேடையிலேயே சூர்யா, கார்த்தியை மிரட்டிய சிவக்குமார்

சினிமா ஆரம்ப காலத்தில் சிவகுமார் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் அனுபவித்துள்ளார். வாழ்க்கையில் எந்த அளவிற்கு கஷ்டங்கள் அனுபவித்தாரோ அதே அளவிற்கு சினிமா துறையில் நுழைவதற்கும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். சிவகுமார் பல படங்கள் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பல நடிகர்களின் படங்களில் சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

நடிகர் சிவகுமார் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் காலத்திலிருந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். சிவகுமாரின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றி உள்ளவர் சிவாஜிகணேசன் தான். அன்றைய காலகட்டத்தில் சிவாஜிகணேசன் அடித்துக்கொள்ள ஆளே இல்லை அந்த அளவிற்கு தனது நடிப்பால் பல ரசிகர்களை வைத்திருந்தார். அப்போதெல்லாம் சிவகுமாருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பே கிடைத்ததில்லை.

அதனால் சிவகுமார் சிவாஜி கணேசன், எஸ்எஸ் ராஜேந்திரன் மற்றும் ஜெமினி கணேசன் போன்ற பல நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். சிவாஜி கணேசன் மற்றும் சிவகுமார் நடிப்பில் கிட்டத்தட்ட 16 படங்களுக்கு மேல் வெளியாகியுள்ளன. இவரது நடிப்பில் வெளியான பசும்பொன், கந்தன் கருணை, உயர்ந்த மனிதன் மற்றும் ராஜராஜ சோழன் போன்ற பல படங்கள் அடங்கும்.

நடிகர் சிவக்குமார் பிறந்த ஒரு சில நாட்களிலேயே அவரது தந்தை இறந்துள்ளார். இதனால் சிவக்குமார் தனது அப்பா சிவப்பா, கருப்பா என்பது கூட தெரியாமல் இருந்ததாக கண்கலங்கி கூறியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் சிவகுமார் சினிமாவில் வருவதற்கு முன்பு பல இடங்களில் சென்று ஓவிய படங்கள் வரைந்து உள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அன்றைய காலத்தில் தனது வாழ்க்கையில் பயணித்துள்ளார்.

surya karthi sivakumar

அதுமட்டுமில்லாமல் 22 பேர் தங்கியிருக்கும் காலனியில் சிவகுமார் குடும்பத்துடன் தங்கி உள்ளார். அதில் இரண்டே இரண்டு கழிப்பறை தான் இருந்துள்ளது. இதனால் சிவக்குமார் காலை 4.30 மணிக்கு எழுந்து கழிவறைக்கு சென்றால் தான் வேலைக்கு போக முடியும் என கூறியுள்ளார்.

காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து கொள்வதால் என்ன செய்வதென்று தெரியாமல் போனதால் யோகா கற்றுக் கொண்டதாக சிவகுமார் கூறியுள்ளார். இவருக்கு இன்றும் மார்க்கண்டேயன் என பட்ட பெயர் உள்ளது.

இந்த மாதிரி அன்றைய காலகட்டத்தில் பல கஷ்டங்கள் பட்டதாக சிவகுமார் கூறியுள்ளார். ஆனால் எனது பிள்ளைகளான சூர்யா மற்றும் கார்த்திக் எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்காமல் தான் வளர்த்து வந்ததாகவும் அவர்கள் பிறக்கும் போது ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து தான் வந்தார்கள் எனவும் கூறியுள்ளார்.

சிவகுமார் சொல்வதை கேட்கும்போது சூர்யா மற்றும் கார்த்தி வாழ்க்கையில் பெரிய அளவிற்கு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை என்பது தெரிகிறது. நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளேன், ஆனால் சூர்யா மற்றும் கார்த்தி தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் என்று மேடையிலேயே ஒரு முறை மிரட்டியுள்ளார் சிவக்குமார்.

ஆனால் கார்த்திக் கூட திரைத்துறையில் வெற்றிகள் சிறிது காலத்திலேயே கிடைத்துவிட்டன. ஆனால் சூர்யாவிற்கு பல படங்களில் கஷ்டப்பட்டு வெற்றிகள் கிடைத்தது.

Trending News