சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிவக்குமாரின் முதல் ஜோடியே சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தான்.. 40 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி

Actor Sivakumar’s first couple is Siragadikka Aasai Actress: பெரும்பாலான நடிகர், நடிகைகள் வெள்ளித்திரையில் மார்க்கெட் பறிபோன பிறகுதான் சின்னத்திரையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவார்கள். அதிலும் விஜய் டிவியின் டிஆர்பி-ஐ தூக்கி நிறுத்தக்கூடிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஒருவர் சிவக்குமாருக்கு காதலியாக நடித்து, அதன் பின்பு தான் இப்போது சீரியலில் நடிக்க வந்திருக்கிறார் என்ற விஷயம் இப்போது  சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

80 வயதாகியும் பழம்பெரும் நடிகை ரேவதி, தற்போது சின்னத்திரையில் டாப் ஹீரோ ஹீரோயின்களின் பாட்டியாக தொடர்ந்து நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே முடிந்த மௌனராகம் சீரியலில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழும் சரஸ்வதியும், சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ முத்துவின் பாட்டியாகவும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டுகிறார்.

இந்த சீரியலில் பாட்டி அவருடைய மருமகள் விஜயாவை மிரட்டி உருட்டி வேலை வாங்குவதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஏனென்றால் மூன்று மருமகள்களையும் ஒரே மாதிரியாக பார்க்காமல் மீனாவை மட்டும் தரக்குறைவாக நடத்தும் விஜயாவை பாட்டி அடக்கி ஆள்வதனாலேயே சின்னத்திரை ரசிகர்களிடம் பழம்பெரும் நடிகை ரேவதிக்கு மவுசு கூடிவிட்டது.

Also read: முத்துவின் சட்டையை பிடித்த மச்சான்.. நண்பனுக்காக கையை முறித்த சம்பவம்

சிவகுமாரின் காதலியாக நடித்த நடிகை ரேவதி

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரைகளில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் நிறைய கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் சூர்யா, கார்த்தி இவர்களின் தந்தையும் நடிகருமான சிவகுமாரின் முதல் படமான காக்கும் கரங்கள் படத்தில் அவருக்கு முதல் ஜோடியும் காதலியுமாக நடித்தவர் நடிகை ரேவதி தான்.

இதே படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரனின் தங்கையும் ரேவதி தான். மேலும் தனி பிறவி படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாகவும் இவர் நடித்தார். இவர் என்னதான் படங்களில் அதிகமாக ஹீரோயினாக நடிக்காவிட்டாலும், இவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றது. சினிமாவில் வளர்ந்து வந்த சமயத்தில் இவருக்கு திடீரென்று திருமணமாகிவிட்டது.

கல்யாணத்திற்கு பின் பெங்களூரில் செட்டிலான ரேவதி, அதன்பின் 40 வருட இடைவெளிக்கு பிறகு மறுபடியும் அம்மாவின் கைபேசி, வத்திக்குச்சி போன்ற படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதிலும் அம்மாவின் கைபேசி படத்தில் இவருடைய நடிப்பு ரொம்பவே எமோஷனலாக இருந்தது. அதன் பின்பு தான் இவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்ததால், அதை இப்போது சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சிவக்குமாரின் முதல் ஜோடி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ரேவதி

Kaakum Karangal-cinemapettai
Kaakum Karangal-cinemapettai

Also read: விஜயாவிடம் தொக்காக மாட்டப் போகும் மீனா.. முத்துவின் சண்டையை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடும் ரோகிணி

Trending News