Soori: வெண்ணிலா கபடி குழு என்ற படம் தான் சூரி என்ற ஒரு நடிகரை தமிழ் சினிமா மக்களுக்கு பரீட்சையபடுத்தியது.
பரோட்டா சூரி தான் இன்று ஒரு ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். எந்த நிலைக்கு போனாலும் வந்த நிலையை மறக்கக்கூடாது என்று சொல்வார்கள்.
அந்த விஷயம் சூரிக்கு மறந்து விட்டதா என்ன என்று தெரியவில்லை. சமீப காலமாக சுசீந்திரனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய ஹிட் படம் எதுவும் கிடையாது.
அப்படி இருக்கும் பட்சத்தில் சூரியை வைத்து ஒரு படம் இயக்குவதற்கு அவர் ஆசைப்பட்டு கேட்டிருக்கிறார். அதற்கு சூரி சொன்ன பதில் தான் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
அதாவது சூரியை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். ஆனால் சுசீந்திரன் இயக்குனராக வேண்டாம் என்று சொல்கிறார்களாம்.
இதை சூரி சுசீந்திரனிடமே நேரடியாக சொல்லி இருக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பிறகு சூரிக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்தார் சுசீந்திரன்.
இப்போது இருக்கும் பொருளாதார நிலைமைக்கு சுசீந்திரன் இயக்கும் படத்தை தயாரிக்க கூட செய்யலாம். தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனருக்காக இதைக் கூட செய்ய அவர் தயாராக இல்லை போல.