Soori : காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாலும் அதில் வெற்றி பெற்றவர்கள் என்பது சொற்பம் தான். இந்நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரிக்கு அடுத்தடுத்த ஜாக்பாட் தான் அடித்து வருகிறது.
அடுத்ததாக கருடன் மற்றும் கொட்டுகாளி படங்களில் நடித்த நிலையில் அவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்போது விடுதலை 2 படத்தில் சூரி நடித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த சூழலில் ஒரு புறம் காமெடி நடிகராக பல படங்களை கைவசம் வைத்துள்ள சூரிக்கு கதாநாயகனாக இரண்டு பட வாய்ப்பு வந்திருக்கிறது. விமலின் விலங்கு என்ற வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் சூரியை வைத்து ஒரு படத்தை எடுக்க இருக்கிறார்.
சூரியின் லயன் அப்பில் இருக்கும் படங்கள்
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் விடுதலையை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் கதையில் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். விடுதலை படத்தை தயாரித்தவர் தான் எல்ரெட் குமார்.
இவரின் அடுத்த தயாரிப்பிலும் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதற்கான கதையை வெற்றிமாறன் எழுதியுள்ள நிலையில் மதிமாறன் படத்தை இயக்க இருக்கிறார். அதாவது ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான செல்பி படத்தை எடுத்தவர் தான் மதிமாறன்.
இவர் விடுதலை 2 படத்திலும் பணிபுரிந்துள்ள நிலையில் அடுத்ததாக சூரியை வைத்து படம் எடுக்கிறார். ஏற்கனவே விடுதலை படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்த நிலையில் மீண்டும் வெற்றிமாறன் கதையில் சூரி நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.