ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Soori: ஆஹா இந்த ராசி ஒர்க் அவுட் ஆகும் போல.. பெரிய கைகளுடன் மோத தயாரான சூரியின் போஸ்டர், எப்ப தெரியுமா.?

Soori: சூரி இப்போது காமெடியை விட்டுவிட்டு முழு நேர ஹீரோவாக மாறிவிட்டார். விடுதலை அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக கமிட்டாகி வருகிறார்.

அதில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோருடன் இணைந்து இவர் நடித்திருக்கும் கருடன் இப்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. அதன் போஸ்டரை சூரி தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி கருடன் மே மாதத்தை குறி வைத்து வெளியாக இருக்கிறது. ஆனால் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இந்த மாத இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் மூலம் சூரியும் இந்த மே மாத ரேசில் களம் இறங்கியுள்ளார்.

கருடன் போஸ்டர்

soori-karudan
soori-karudan

மேலும் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் மே மாதம் தொடங்கி வெளியான அரண்மனை 4 வெற்றிக்கான பிள்ளையார் சுழியை போட்டது.

அதையடுத்து இன்று வெளியான ஸ்டார் படமும் நல்லா விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி மே மாதம் ராசியான மாதமாக மாறி உள்ளது.

அந்த வரிசையில் வெளியாகும் கருடன் வெற்றி வாய்ப்பை தட்டி தூக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த வாரம் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்காது.

Trending News