வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஓட்டு போட வந்த குமரேசனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இதுதான் ஜனநாயக உரிமையா.? கிளம்பிய சர்ச்சை

Actor Soori: பல வாரங்களாக விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரங்கள் நடந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதிலும் தமிழகத்தின் மொத்த வாக்குப்பதிவு 72 சதவீதமாக இருக்கிறது.

இப்படி பரபரப்பாக நடந்த தேர்தலில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ் என அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஆனால் ஓட்டு போட வந்த சூரிக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால் அவருடைய பெயர் விடுபட்டு போயிருந்தது. ஆனால் அவருடைய மனைவி தன் வாக்கினை பதிவு செய்தார். தற்போது இதை சூரி ஒரு குமுறலாக பத்திரிக்கையாளர்களிடம் கொட்டி தீர்த்துள்ளார்.

சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஓட்டு போட முடியாமல் போனது எனக்கு மன வருத்தமாக இருக்கிறது. யார் பக்கம் இதில் தவறு என்று தெரியவில்லை. ஆகையால் மக்கள் அனைவரும் தவறாமல் வாக்கினை பதிவு செய்யுங்கள் என வேதனையுடன் கூறினார்.

தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்று பலருக்கு நடந்துள்ளதாக மக்கள் தங்கள் அனுபவத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இதுதான் ஜனநாயக உரிமையா? சரியான ஆவணங்கள் இருந்தும் கூட எப்படி பெயர் விடுபட்டு போகும்? என நெட்டிசன்கள் தொடர் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

Trending News