செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தனுசுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு சூரி கைவசம் இருக்கும் படங்கள்.. வெற்றிமாறன் போட்ட பிள்ளையார் சுழி

Actor Soori upcoming movies: தமிழ் சினிமா ஹீரோக்களில் தற்போது அதிக படங்கள் கமிட் ஆகி இருப்பது தனுஷ் தான் என சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு போட்டியாக நடிகர் பரோட்டா சூரி எக்கச்சக்க படங்களில் தமிழ் ஆகியிருப்பது தற்போது வெளியாகி இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்த பிறகு சூரி மீதான ரசிகர்களின் பார்வை ரொம்பவே மாறிவிட்டது. சூரி அடுத்தடுத்து படங்களில் கமிட்டான அதற்கும் இதுதான் காரணம்.

சூரி கைவசம் இருக்கும் படங்கள்

கருடன்: இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் படம் தான் கருடன். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் முடிந்து டப்பிங் வேலைகளும் ஆரம்பித்து விட்டது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலை 2: இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

கொட்டு காளி: நண்பன் சூரியை ஹீரோவாக நடிக்க வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த படம் தான் கொட்டு காளி. இந்த படத்தில் அன்னா பென் சூரிக்கு கதாநாயகியாக நடித்திருக்கிறார். கூழாங்கல் படத்தின் மூலம் விருது பெற்ற இயக்குனர் வினோத் ராஜ் தான் இந்த படத்தை இயக்கி இருப்பது. கொட்டு காளி படமும் பெர்லின் திரைப்பட விழாவில் ஒளிபரப்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

Also Read:ரொம்ப பிஸின்னு ஆட்டிட்யூட் காட்டும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச திரைப்பட விழாவில் சூரி

ஏழு கடல் ஏழு மழை: நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் தான் ஏழு கடல் ஏழுமலை. இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்குகிறார். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல விருது விழாக்களில் பங்கு பெற்று வருகிறது சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.

பார்த்தோம் பழகினோம்: நிறைய புது முகங்களை வைத்து இயக்குனர் ராசு மதுரவன் வித்தியாசமான முயற்சி செய்திருக்கும் காதல் கதை தான் பார்த்தோம் பழகினோம். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சூரி மற்றும் தம்பி ராமையா முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

படவா: தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி கெமிஸ்ட்ரியில் விமல் மற்றும் சூரி இருப்பார்கள். படவா படத்தின் மூலம் இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். இந்த படத்தை கேவி நந்தா இயக்கியிருக்கிறார்.

Also Read:விஷ்ணு, சூரிக்கு இடையே சண்டையை தூண்டி விட்ட 3வது நபர்.. அட இதுக்கும் SK தான் காரணமா?

Trending News