செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா?. ஆச்சரியமூட்டும் ஃபேமிலி போட்டோ

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுக்கு இணையாக ஸ்ரீகாந்தால் வளர முடியவில்லை என்றாலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீகாந்த் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஸ்ரீகாந்தை தேடிவந்தது.

அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற பல படங்கள் ஸ்ரீகாந்தின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதன் பிறகு கதை தேர்வு செய்வதில் ஸ்ரீகாந்த் சொதப்பியதால் அடுத்தடுத்த பிளாப் படங்கள் கொடுத்து வந்தார்.

Also Read : கடவுள் பாட்டை காதல் பாட்டாக மாற்றிய 5 இசையமைப்பாளர்கள்.. ஆத்தா பாட்டை காப்பியடித்த யுவன் சங்கர் ராஜா

மேலும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான காபி வித் காதல் படம் படு மோசமான தோல்வி சந்தித்தது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஸ்ரீகாந்த் மகள் உள்ளார். அவரே இளமையாக உள்ள நிலையில் இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அளிக்கிறது. மேலும் அவரது மகனும் ஸ்ரீகாந்த் தாண்டி உயரமாக வளர்ந்து இருக்கிறார்.

Also Read : சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரே படத்தில் கேரக்டரை டேமேஜ் பண்ணிய தனுஷ்

இப்போது ஸ்ரீகாந்த் ஃபேமிலி போட்டோ இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இப்போது ஸ்ரீகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார். ஏனென்றால் எஸ் ஜே சூர்யா, அருண் விஜய் போன்றோர் வில்லன் கதாபாத்திரத்தை கையில் எடுத்ததால் இப்போதும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருவதால் ஸ்ரீகாந்த் இந்த முடிவு எடுத்துள்ளார்.

srikanth-family-photo
Srikanth-family-photo

Also Read : தலையில் அடித்துக்கொண்டு, முகம் சுளிக்க வைத்த 5 படங்கள்.. கணவன் தம்பி மீது உயிராக இருந்த சங்கீதா

Trending News