தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சமீப காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார். அதற்கு அவரது சொந்த பிரச்சனையும் காரணம் என்கிறார்கள். எந்த ஒரு நடிகரையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்தான் வடிவேலு.
ஒரு காலத்தில் வடிவேலுவுக்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அதிகம். அப்படிப்பட்ட வடிவேலு சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து சற்று விலகி உள்ளார். அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது சங்கர் கொடுத்த புகார் இன்னமும் அவரை நடிக்க விடாமல் தொந்தரவு செய்து வருகிறது.
இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் உருவான படத்தின் பணப்பிரச்சனையால் தற்போது வரை சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார் வடிவேலு. ஆனால் அதற்கு முன்பே அரசியலில் தேவையில்லாமல் வாய் விட்டு விட்டார். இதனை வடிவேலுவின் சக நண்பரும் நடிகருமான சுந்தர் ராஜ் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வடிவேலு விஜயகாந்த் பற்றிப் பேசியது மிகவும் தவறு எனவும், தமிழ் சினிமாவில் உள்ள சின்னச்சின்ன நடிகர்களையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்ட விஜயகாந்தை பற்றி அவர் தேவையில்லாமல் பேசியது தனக்கே சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நான் சொன்ன போதும் அவன் கேட்கவில்லை என பேசியுள்ளார்.
மேலும் இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுப்புராஜ் மருதமலை படத்தில் சாரைப்பாம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதற்கு முன்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் மருதமலை படம் அவருக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.
எவ்வளவு திட்டினாலும் வடிவேலு மீண்டும் சினிமாவுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் சுப்புராஜ். என்னதான் நண்பராக இருந்தாலும் பொது பேட்டியில் வடிவேலுவை அவன் இவன் என்று கூறியது வடிவேலுவுக்கு கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.