வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

10 வருஷமா ஹிட் படம் இல்ல, இருந்தாலும் சூர்யா டாப் ஹீரோ.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மாஃபியா கும்பல்

Actor Surya: ஒரு நடிகர் வெற்றி ஹீரோவா அல்லது ஃபீல்ட் அவுட் ஆனவரா என்பது அவர் நடிக்கும் படங்களின் வெற்றியை பொறுத்து தான் அமையும். முன்பெல்லாம் ஒரு படத்தின் வெற்றி என்பது அது தியேட்டரில் எத்தனை நாள் ஓடுகிறது, எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை வைத்துதான் முடிவு செய்யப்படும். இப்போதெல்லாம் படத்தின் வெற்றி சமூக வலைத்தளங்களில் தீயாய் வேலை செய்யும் ஐடி விங்குகளால் முடிவு செய்யப்படுகிறது.

ஒரு படம் எவ்வளவு நாள் தியேட்டரில் ஓடுகிறது, எவ்வளவு வசூல் செய்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது. இதனாலேயே நிறைய முன்னணி ஹீரோக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் நடிகர் சூர்யாவின் கடந்த பத்து வருட சினிமா வெற்றி எப்படி இருந்தது என்பதை பார்க்காமலேயே, அவர் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்.

Also Read:நண்டு சிண்டெல்லாம் அறிக்கை வெளியிட்டு கார்த்தியை அசிங்கப்படுத்திட்டு.. வாடிவாசல் ஹீரோவாக மாறும் ராஜன்

சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் ராஜா அமீருக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதனால் நிறைய சினிமா பிரபலங்கள் அமீரை ஆதரித்து தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருந்தார்கள். சினிமா ரசிகர்கள் ஒரு படி மேலே போய் பிரச்சனைக்கு காரணமான சூர்யா மற்றும் கார்த்தியை விமர்சிக்க ஆரம்பித்தார்கள். அப்படித்தான் சூர்யாவின் கதையும் வெளியில் வந்திருக்கிறது.

வெற்றி ஹீரோ லிஸ்டில் சூர்யா

நடிகர் சூர்யாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சிங்கம் மற்றும் அயன் போன்ற படங்கள் மிகப்பெரிய மாஸ் வெற்றியை கொடுத்து இருக்கிறது. அதன் பின் வெளியான ஏழாம் அறிவு மற்றும் மாற்றான் போன்ற படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு டீசன்ட்டான வெற்றியை பெற்றிருக்கின்றன. அதன் பின்னர் மாஸ் ஹிட் படம் என்று எதுவுமே இல்லை.

சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 படங்கள் சூர்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தொடர்ந்து, தானா சேர்ந்த கூட்டம் ,என் ஜி கே மற்றும் காப்பான் போன்ற படங்கள் தோல்வியை தழுவின. இதற்கிடையில் சூரரை போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் சூர்யாவின் சினிமா கேரியரில் முக்கியமான படங்களாகவும், தமிழ் சினிமாவிற்கு பெயர் வாங்கி கொடுத்த படங்களாகவும் இருக்கிறது.

எப்படி பார்த்தாலும் இந்த இரண்டு படங்களும் OTT தளத்தில் ரிலீசானவை. இதன் பிசினஸ் என்பது அந்தந்த நிறுவனங்களுக்கும், தயாரிப்பு தரப்பிற்கும் சம்பந்தப்பட்டது. அதன் பின்னர் ரிலீஸ் ஆன எதற்கும் துணிந்தவன் தியேட்டர் ரிலீஸ் ஆகி டிசென்ட் வெற்றியை தான் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மாஸ் ஹிட் கொடுக்காத சூர்யா, டாப் ஹீரோ லிஸ்டில் இருப்பது சினிமா மாஃபியா என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Also Read:இதை விட சூர்யா, கார்த்தியை அசிங்கப்படுத்த முடியாது.. இப்பவாச்சும் பேசுங்கய்யா, ஒரே மீமில் வறுத்தெடுத்த ப்ளூ சட்டை

- Advertisement -spot_img

Trending News