திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நீ காட்டின விஸ்வாசம் போதும்.. சிவக்குமார் குடும்பமே சேர்ந்து துரத்தி அடித்த அந்த நபர்

Actor Surya: நடிகர் சூர்யா மீது கடந்த சில மாதங்களாகவே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனது தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. அதைத் தொடர்ந்து கங்குவா பட சூட்டிங் போது விபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து பருத்திவீரன் சர்ச்சை என அவருடைய பெயர் அதிகமாக சமூக வலைத்தளங்களில் அடிபட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சிவகுமார் குடும்பத்திற்கு ரொம்பவும் விசுவாசமாக இருந்த ஒருவர் சூர்யாவை ஏமாற்றி இருப்பது பெரிய அளவில் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. வாரிசு நடிகர் என்ற பெயரில் சூர்யா எடுத்தவுடன் வெற்றி பெறவில்லை. சினிமாவில் அவர் பட்ட கஷ்டங்கள் அதிகம். அப்போதெல்லாம் அவர் கூட இருந்து அவருடைய வெற்றியில் பெரும் பங்கு வகித்த நபர் தான் இந்த விஷயத்தை செய்திருக்கிறார்.

சூர்யாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்த நபர்

சூர்யாவுக்கு பல வருடங்களாகவே பெர்சனல் மேனேஜராக இருந்தவர் தான் தங்கதுரை. சூர்யாவின் வெற்றிகளில் இவருக்குத்தான் அதிக பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் சமீப நாட்களாகவே சூர்யாவை பற்றியும், அவருடைய குடும்பத்தை பற்றியும் தவறான விஷயங்களை வெளியில் சொல்லி வருவதாக தெரிந்திருக்கிறது. ஏற்கனவே பருத்திவீரன் பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது.

Also Read:நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஜோ.. சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் சொத்தின் மதிப்பு

இந்த சமயத்தில் சூர்யாவுக்கு ரொம்பவும் நெருக்கமான, அதீத நம்பிக்கை ஏற்படுத்திய தங்கதுரை இப்படி செய்தது சூர்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் இவர் சூர்யாவின் மேனேஜர் என்பதால் இந்த சொல்வது கண்டிப்பாக யாராக இருந்தாலும் நம்பி விடுவார்கள். இதனால் சூர்யா குடும்பத்தினர் முடிவெடுத்து அவரை வெளியே அனுப்பி விட்டதாக சொல்லப்படுகிறது.

மேனேஜர் தங்கதுரை தமிழ் சினிமாவில் ரொம்பவும் முக்கியமான ஒரு நபர். இயக்குனர் சங்கர், அதிதி சங்கர், தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ரேயா ரெட்டி போன்றவர்களுக்கு இவர் தான் மேனேஜராக இருக்கிறார். இப்படி முக்கியமாக இருக்கும் நபரை தூக்கிவிட்டு, சூர்யா தன்னுடைய கல்லூரி கால நண்பர் ஒருவரை தனக்கு மேனேஜராக ஆகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Also Read:இதுக்கு தான் மும்பையில செட்டில் ஆனோம்.. தலையாட்டி பொம்மையாக மாறிய சூர்யா

Trending News