புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அதிரடி ஆக்சன் இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. அப்புறம் படத்துல பஞ்சுக்கு பஞ்சமில்ல

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா தற்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.

அதன் பிறகு சூர்யா, இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள மற்றும் ஒரு திரைப்படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அடங்கமறு என்ற பிளாக்பஸ்டர் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் தங்கவேல். ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இவர் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து இதுவரை கண்டிராத ஒரு த்ரில்லர் கதையை படமாக்க உள்ளார். இந்தப் படத்தின் கதையை கேட்டு சம்மதித்த சூர்யா விரைவில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆகஸ்டு மாதத்தில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக நடிப்பதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு சூர்யா, கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து சூர்யாவின் நடிப்பில் படங்கள் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News