வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

‘கங்குவா’ டைரக்டருக்கு சூர்யா போட்ட கிடக்கு பிடி.. படத்து மேல ஹீரோவுக்கே நம்பிக்கை இல்லனா எப்படி?

Kanguvaa movie: ஹீரோக்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும் வரைக்கும் தான் இயக்குனர்கள் சொல்வதை கேட்பார்கள். முன்னணி நடிகர்களாக மாறிவிட்டார்கள் என்றால் இயக்குனர்கள் தான் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். ஆரம்ப காலங்களில் என்னதான் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும், சமீப காலத்தில் சறுக்கிய சிறுத்தை சிவாவிற்கு கங்குவா படத்தின் மூலம் சூர்யா தான் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் இடம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் உச்சம் பெற்று விட்டது. பல ஹிட் படங்களை கொடுத்த சூர்யா, சிறுத்தை சிவா உடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற போதே நிறைய எதிர்ப்புகள் வந்தது. அதையும் மீறித்தான் அவர் கங்குவா படத்தை இயக்கும் வாய்ப்பை சிறுத்தை சிவாவிற்கு கொடுத்திருக்கிறார்.

கங்குவா படம் வரலாற்று கதையை மையமாகக் கொண்டது, சூர்யாவுக்கு டபுள் ரோல், பான் இந்தியா மூவி என ஏற்கனவே பெரிய அலப்பறையை கூட்டி விட்டது. அதுமட்டுமில்லாமல் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டன. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் சூர்யா இயக்குனருக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு அவரை லாக் பண்ணி இருக்கிறார்.

Also Read:விஜய்க்கு சொன்ன அரசியல் கதை, உடனே ஓகே சொன்ன TVK தலைவர்.. மிரட்டி விடப் போகும் சூர்யா பட இயக்குனர்

அதாவது படம் ரிலீஸ் ஆகும் வரை பட குழு எந்த ஒரு அப்டேட்டையும் கொடுக்க கூடாது என்பதுதான் சூர்யாவின் முதல் கண்டிஷன் ஆக இருக்கிறது. மேலும் படத்திற்கான பிரமோஷன் என்று தனியாக எந்த நிகழ்ச்சியும் வேண்டாம் எனவும் சொல்லிவிட்டாராம். சமீபத்தில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானதிலேயே பயங்கர அப்செட் ஆகி, இயக்குனரை தனியாக அழைத்து இனி இது போல் நடக்கவே கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

ஹீரோவுக்கே நம்பிக்கை இல்லனா எப்படி?

எந்த ஒரு விதத்திலும் கங்குவா படம் ரிலீஸ் ஆவதற்கும் முன்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விடக்கூடாது என்பதுதான் சூர்யாவின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இதற்காகத்தான் படத்தின் பிரமோஷன், அப்டேட்டுகள் எதுவுமே வெளிவரக் கூடாது என ரொம்பவும் உறுதியாக சொல்லி இருக்கிறார். இதனால் இயக்குனர் சிறுத்தை சிவா ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம்.

சமீபகாலமாக ஓவர் ஹைப் கொடுக்கப்படும் எந்த படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறுவது இல்லை. அப்டேட்டுக்கு மேல் அப்டேட் கொடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற விட்டு திரை கதையில் அதை நிவர்த்தி செய்ய முடியாததால் தான் நிறைய படங்கள் தோல்வியை அடைகின்றன. இதனால்தான் சூர்யா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இருந்தாலும் அவர் நடித்த படத்தின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை என்றால் எப்படி என்று தான் இப்போது தோன்றுகிறது.

Also Read:விஜய்யின் தொடர்பை துண்டிக்கும் 4 நடிகர்கள்.. மேலிடத்தை பகைச்சிக்க விரும்பாமல் பம்மும் ஹீரோக்கள்

Trending News