சினிமாவை பொறுத்தவரை முதல் சில படங்களிலேயே முன்னணி நடிகர் ரேஞ்சுக்கு வந்துவிடுவார் என நினைக்கும் சில நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் கதை தேர்வில் சொதப்பி சினிமாவை விட்டு காணாமல் போன சோகம் நிறைய நடந்துள்ளது.
அந்தவகையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் தான் தருண் குமார்(Tarun Kumar). மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அடிப்படையில் தெலுங்கு நடிகரான இவருக்கு தமிழிலும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.
தெலுங்கில் இளம் நாயகனாக ஓரளவு வரவேற்பு பெற்ற தருண்குமாரை தமிழில் ஆர்பி சௌத்ரி 2002ஆம் ஆண்டு தன்னுடைய தயாரிப்பில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம்தான் புன்னகை தேசம். அதனைத் தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்திருந்தார்.
அன்றைய சென்சேஷனல் இசையமைப்பாளராக இருந்த ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமில்லாமல் திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சங்கரின் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய ஜோதி கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான இந்த படம் முதல் நாள் முதல் காட்சியிலேயே படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் தான். குணச்சித்திர வேடங்களிலும் ஃபாரின் மாப்பிள்ளை வேடங்களிலும் பயன்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக நடிப்பையே மொத்தமாக முழுக்கு போட்டு விட்டார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த மாதிரி தமிழ் சினிமாவில் பெரிய ஆளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பலரும் முதல் இரண்டு படங்களிலேயே காணாமல் போயுள்ளனர்.