ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கடுப்பாகி அப்பாவின் நம்பரையே பிளாக் செய்த முன்னணி நடிகர்.. வீதிக்கு வந்த வீட்டு சண்டை

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் ஒருவரை சமீபகாலமாக அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எழுப்பி வருவதால் டென்ஷன் ஆகி அந்த நடிகர் தன்னுடைய தந்தையின் நம்பரை பிளாக் செய்து விட்டாராம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணியில் இருக்கும் ஒரே நடிகர் அவர்தான். அடுத்ததாக மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் வருகின்ற பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இதனால் ஊரே சந்தோசமாக இருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் அந்த நடிகரை தினம் தினம் வெறுப்பேத்தி அந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறாராம் அவரது தந்தை.

அந்த நடிகருக்கும் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் சரியான நேரம் வரும்வரை பொறுமையாக இருக்க வேண்டும் என தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இதற்கிடையில் அந்த நடிகரின் தந்தை அரசியல் ஆசையில் ஊறி விட்டார் போல. தினமும் அவருக்கு முதலமைச்சர் கனவு வருகிறதாம். இதனால் கனவை நினைவாக்க வேண்டுமென சமீபத்தில் ஒரு கட்சியை ஆரம்பித்தார்.

இதனால் கடுப்பான அந்த நடிகர் உடனடியாக தனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விட பாவம் அந்த தந்தை. முகத்திலே ஈ ஓடிவிட்டதாம். இதற்கிடையில் அந்த நடிகர் புதிய படத்திற்கு விலக்கு கேட்டு அரசிடம் தஞ்சமடைந்தார்.

அவர்களும் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி அனுப்பி விட்டனர். இதற்கிடையில் எங்கேயோ போற மாரியாத்தா என்மேல வந்து ஏறாத்தா என்ற கணக்காக தேவையில்லாமல் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து அலும்பு செய்து கொண்டிருக்கிறாராம் அவரது தந்தை.

இந்தாளு சும்மாவே இருக்க மாட்டார் என டென்சனாகி தனது தந்தையின் நம்பரை பிளாக் செய்து விட்டாராம். ஏற்கனவே ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பது போல ஆகி விட்டாதாம் அவரது குடும்பத்தில்.

- Advertisement -

Trending News