செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சர்வைவர் நிகழ்ச்சிக்கு முன் உமாபதி கூறிய வார்த்தைகள்.. நெகிழ்ந்து போன தம்பி ராமையா.!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் காடர்கள், வேடர்கள் என இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் காடர்கள் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

காடர்கள் அணியின் ஒரு போட்டியாளர் தான் உமாபதி. இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகன். தன் மகனை பற்றிய சில விஷயங்களை தம்பி ராமையா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது, எனக்கு இரண்டு பிள்ளைகள் பெண்ணிற்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கிறார்கள்.

இளையவன் தான் உமாபதி. நான் என் மகனிடம் எப்படி இருக்கணும், எப்படி இருக்கக்கூடாது என்று என் தந்தையிடம் கற்றுக் கொண்டேன். உமாபதிக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். அவனுக்கு சிறு வயதிலிருந்தே சாகசங்கள் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை. அதனால்தான் அவன் சர்வைவர் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டபோது நான் சம்மதித்தேன்.

பிட்னஸ் விஷயத்தில் ஈடுபாடுடன் இருக்கும் என் மகனுக்கு இன்டர்நேஷனல் பைட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற ஆசை. நான் எத்தனையோ இயக்குனர்களிடம் பணியாற்றி உள்ளேன். ஆனால் ஒருவரிடமும் என் மகனுக்காக நான் வாய்ப்பு கேட்டதில்லை.

சர்வைவர் நிகழ்ச்சியில் கூட உமாபதி என் தந்தை எனக்கு விசிட்டிங் கார்டு தான், கிரெடிட் கார்டு இல்லை என்று கூறியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பு கூட என்னிடம் அவன் நீங்கள் பட்ட கடனை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் உங்களுக்கு பிடித்ததை, பிடித்தவர்களோடு செய்யுங்கள் என்று கூறினான்.

இவ்வாறு தன் மகனைப் பற்றி தம்பி ராமையா மிகவும் உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். மேலும் என் மகன் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விடுவான் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். தம்பி ராமையா தன் மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து மணியார் குடும்பம் என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thambi Ramaih
Thambi Ramaih

Trending News