Karunaas Own Business: நகைச்சுவை நடிகர் கருணாஸ் மீது இப்போது நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு காலத்தில் சினிமாத்துறையில் அவருடைய பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. நந்தா படத்தில் இவர் நடித்த லொடுக்கு பாண்டி கேரக்டர் தான் இவருக்கு அடையாளமாக மாறியிருந்தது. நடிகர் அஜித்துடன் வில்லன் படத்தில் இவர் செய்த காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
திண்டுக்கல் சாரதி படத்தின் மூலன் கருணாஸ் ஹீரோவாக களம் இறங்கினார். ஹீரோவாக நான்கைந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே, முக்குலத்தோர் புலிப்படை என்னும் கட்சியை தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த இவர், திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
சினிமா, அரசியல் என்றில்லாமல் கருணாஸ் சொந்த தொழிலும் கல்லா கட்டி கொண்டிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் கருணாஸ் ரத்தினவிலாஸ் என்னும் பெயரில் ஹோட்டல் பிசினஸ் நடத்தி வருகிறார். இந்திய மற்றும் சைனீஸ் உணவு வகைகள் இங்கு வழங்கப்படுகிறது. மெயின் இடத்தில் அமைந்து இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதி கொண்டு தான் இருக்கிறது.
இந்த ஹோட்டலில் 60 முதல் 120 ரூபாய் வரைக்கும் சைவ மற்றும் அசைவ சாப்பாடுகள் கொடுக்கப்படுகின்றன. சைனீஸ் உணவு வகைகளான நூடுல்ஸ் மற்றும் ப்ரைடு ரைஸ் போன்றவை 120 ரூபாய்க்கு மேல் விலை ஆரம்பமாகிறது. கோழிச்சாரு, நெஞ்செலும்பு பிரட்டல், உப்புக்கரி என தரமான அசைவ உணவு வகைகள் 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. மேலும் இந்த ஹோட்டல் ஸ்விக்கி, சோமட்டோ நிறுவனங்களுடன் இணைந்து பணி புரிகிறது. நடிகர் கருணாஸ் இந்த ஹோட்டல் பிசினஸ் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கிறார்.