புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பெண்கள் விஷயத்தில் பலமாக சிக்கிய 40 வயது நடிகர்.. பயத்தில் வீட்டிற்குள் பதுங்கிய சோகம்

ஒரு காலத்தில் தன்னை பிளேபாய் என்று அழைத்ததை பெருமையாக நினைத்த அந்த நடிகர் சமீபகாலமாக பிளேபாய் என்ற பெயரைக் கேட்டாலே தெறித்து ஓடும் அளவுக்கு பிரச்சனைகள் அவரைச் சுற்றி வந்துள்ளது. அதுவும் சாதாரண பிரச்சினைகள் கிடையாது. பெண்கள் பிரச்சனை.

சாதாரணமாகவே பெண்கள் பிரச்சனை என்றால் சிக்கியவர்களை பிதுக்கி விடுவார்கள். அதுவும் ஒரு நடிகர் மாட்டினால் சும்மா விடுவார்களா. பத்திரிகைகளில் வச்சி செய்துவிட்டார்களாம். சமீபத்தில் தன்னைவிட 15 வயதுக்கு மேல் குறைவான வயது கொண்ட இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அந்த நடிகர். ஒரு காலத்தில் அந்த நடிகர் வலையில் விழாத நடிகைகளே கிடையாது. ப்ளே பாய் என்ற பெயரில் கெத்தாக சுற்றி வந்தார்.

திருமணத்திற்கு பிறகு அந்த நடிகரை அதிகமாக பார்ட்டியில் பார்க்க முடியவில்லை. அப்படியே பார்ட்டிக்கு வந்தாலும் தன்னுடைய இளம் மனைவியுடன் தான் வருகிறாராம். ஒரு காலத்தில் குடியும் கூத்துமாக நடிகைகளுடன் ஜாலியாக இருந்த நடிகரா இது என அனைவரும் ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகருடன் பழகிய நடிகைகளுக்கு அவரைப் பார்த்து அதிர்ச்சியே வந்து விட்டதாம். இது ஒருபுறமிருக்க சமீபத்தில் அந்த இளம் நடிகர் ஒருவர் வெளிநாட்டு பெண் ஒருவரிடம் திருமணம் செய்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக செய்தி வெளியானது.

அதைப்பற்றி அந்த நடிகர் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காததால் அது உண்மையானது. மேலும் அந்த பெண் ஏமாற்றப்பட்டதற்கு அந்த நடிகரின் தாயாரும் உடந்தை என செய்திகள் வந்ததைத் தொடர்ந்து தற்போது வீட்டில் குடும்பத்துடன் பதுங்கி விட்டாராம் அந்த நடிகர்.

முன்னரெல்லாம் தான் வெளியில் வருவதை பல நண்பர்களுக்கு போன் போட்டு சொல்லும் அந்த நடிகர் தற்போது வெளிநாட்டு படப்பிடிப்புக்கு சென்றது கூட யாருக்கும் தெரியவில்லையாம். பெண்களால் எனக்கு இவ்வளவு பிரச்சனை வரும் என்று தெரியாமல் போய்விட்டதே என தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் தண்ணியைப் போட்டு புலம்புகிறாராம்.

கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க, இப்ப அனுபவிங்க!

Trending News