தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்ற கௌரவத்துடன் கொடிகட்டிப் பறந்த காமெடி நடிகர் தான் வடிவேலு. அப்படியிருந்த இவருக்கு சில வருடங்களாக படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று, நம் அனைவருக்கும் ஓரளவிற்கு தெரிந்த விஷயம் தான்.
இந்த சூழலில் சினிமாவில் நடிப்பதற்கு உடலில் தெம்பு இருந்தும், நடிக்க வாய்ப்புக் கிடைக்காமல் குமுறி கொண்டிருக்கிறார். இவர் மீண்டும் சுராஜின் கத்திச்சண்டை படத்தின் மூலம் மறுபடியும் காமெடியனாக சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பு ஏற்பட்ட பிரச்சினையினால் படத்திற்கு ரெக்கார்ட் போடப்பட்டு வடிவேலு படங்களில் நடிக்க மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு நான்காண்டுகள் கழித்து நேற்று முன்தினம் தான் அந்தத் தடை விலக்கப்பட்டது.
‘தடை விலகியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய நடிப்பினால் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்ததால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம் தான் என்று கூறிப் பூரிப்படைந்தார்.
அடுத்த இரண்டு படங்களில் கதநாயகனாக நடித்த பின்பு நகைச்சுவை வேடங்களில் நடிப்பேன் என அந்தப் பேட்டியில் வடிவேலு குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு டிவி சேனலில் செய்தியாளர் ஒருவர் வடிவேலுவிடம், அரசியலுக்கு முன்பு போல் வருவீர்களா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு வடிவேலு ஆவேசத்துடன், ‘உள்ள குச்சியை விடக்கூடாது. தொடர்ந்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன்’ என்று பேசும் பொழுதே கொஞ்சம் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு பதிலளித்துள்ளார். இவருடைய பேட்டிக்கு பிறகு ரசிகர்கள் பலர், இனி வரும் படங்களில் வடிவேலுவை பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நம்புகின்றனர்.