வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வளர்ந்து வந்த நடிகரை வீட்டிலேயே முடங்க வைத்த வடிவேலு.. என்ன ஒரு கிரிமினல் புத்தி.!

Actor Vadivelu: நகைச்சுவை நடிகர் வடிவேலு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் கம்பேக் கொடுத்தார். அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவருடன் கூட இருந்த கலைஞர்கள் மற்றும் நிறைய நகைச்சுவை நடிகர்கள் அவர் மீது குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தார்கள். வடிவேலுவா இப்படி என நினைக்கும் அளவுக்கு நிறைய விஷயங்கள் வெளிவந்தது.

அட்ஜஸ்ட்மென்ட் டீல், கூட நடிப்பவர்களை வளர விடாமல் தடுப்பது என வடிவேலுவின் கருப்பு பக்கங்கள் வெளியாகி இருந்தது. சமீபத்தில் வேறு ஒரு நடிகரை வளர விடாமல் தடுக்க வடிவேலு போட்ட மிகப்பெரிய திட்டத்தைப் பற்றி தெரிய வந்திருக்கிறது. ஒரு நடிகரை அழிப்பதற்கு இப்படியும் திட்டம் போட முடியுமா என வடிவேலு செய்தது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

சேரன் இயக்கிய வெற்றி கொடி கட்டு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் பெஞ்சமின். இந்த படத்தில் வடிவேலுவை ஒரு காட்சியில் இவர் பயங்கரமாக திட்டுவது போல் நடித்து இருப்பார். அதன் பின்னர் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும், விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை அமைந்தது.

Also Read:உதயநிதியிடம் மட்டும் உத்தமன் வேஷம் போட்ட நடிகர்.. மீண்டும் தலைவிரித்து போடும் ஆட்டம்

இந்த படத்திற்குப் பிறகு பெஞ்சமினுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் வீடு தேடி வந்து அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் அட்வான்ஸ் ஆகிய பெஞ்சமின், ஷூட்டிங் காக கூப்பிடுவார்கள் என காத்திருந்திருக்கிறார். ஆனால் எந்த தயாரிப்பாளர்களிடம் இருந்தும் அவருக்கு அழைப்பு வரவில்லை.

கிட்டதட்ட ஒரு வருடங்களாக தயாரிப்பாளர்களிடமிருந்து அழைப்பு வரும் என வேறு எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்திருக்கிறார். ஆனால் இந்த தயாரிப்பாளர்கள் எல்லாருமே வடிவேலு அனுப்பி வைத்த ஆட்கள் தானாம். ஒன்றரை லட்ச ரூபாய் அட்வான்ஸ் ஆக கொடுக்க வைத்து, பெஞ்சமினை வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் வீட்டிலேயே முடங்க வைத்திருக்கிறார் வடிவேலு.

ஒரு வருடத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும் பொழுது திருப்பாச்சி படத்தின் போது இருந்த வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் இன்று வரை கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஓஹோ என்று வந்திருக்க வேண்டிய நடிகர் பெஞ்சமினை மொத்தமாக அழித்துவிட்டார் வடிவேலு.

Also Read:கேப்டன் கருப்பா இருக்காரு, திமிருடன் நடிக்க மறுத்த நடிகை.. ஓவர் பேச்சு, கடைசியில் வடிவேலுக்கு ஜோடியான அவமானம்

Trending News