வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

என்னது நம்ம நேசமணியா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய வடிவேலு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் ஹீரோவாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி.

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படத்தில் நடிப்பது தொடர்பாக படக்குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இவருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் போட்டிருந்த ரெட் கார்ட் நீக்கப்பட்டது. அதையடுத்து அவர் மீண்டும் பழைய உற்சாகத்துடன் திரைப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

அவர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்புக்காக வடிவேலு சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பிய வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு தற்போது பூரண நலத்துடன் இருக்கிறார். அவரின் உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து அவர் மீண்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில் வடிவேலு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருந்தாலும் அவர் உடல் சற்று இளைத்து நம்ம வடிவேலு வா இது என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

vadivelu
vadivelu

Trending News