வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பட வாய்ப்பு இல்லாததால் ஸ்டாலினை சந்தித்தாரா வடிவேலு.? காரணம் கேட்டு ஆச்சரியத்தில் கோலிவுட் வட்டாரம்!

2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக- விற்கு ஆதரவாக வடிவேலு தீவிர பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது.

அதன் பின்னர் பல்வேறு பிரச்சினைகளால் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. இயக்குனர்களுடன் ஏற்பட்ட மோதல்களாலும், சர்ச்சைகளாலும் அதிக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார் வடிவேல்.

அது ஒரு பக்கம் இருந்தாலும் வடிவேலின் புதிய படங்கள் தொடர்பான பேச்சுக்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது கொரோனா நிவாரண நிதியாக ரூ5 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினார் வடிவேலு. அதன் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரே மாதத்தில் உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஆட்சி நடத்துகிறார் மாண்புமிகு முதல்வர் என்றும், அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பை தீவிரமாக கட்டுப் படுத்தி வருகிறார் என்றும் பேசினார்.

Vadivel1-Cinemapettai.jpg
Vadivel1-Cinemapettai.jpg

மேலும் கொங்குநாடு என தனியாக பிரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளியிட்டார். அதுமட்டுமின்றி அனைவரையும் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தி பேசினார் நடிகர் வடிவேலு.

தற்போது பிரச்சனைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்த வடிவேலு சில படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பட வாய்ப்பிற்காக ஸ்டாலினை சந்தித்து உள்ளாரா என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

Trending News