சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அப்பாவைப் பின்பற்றத் துடிக்கும் மகன். ரெட் கார்டு வாங்கி விடாதீர்கள்!

தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் வடிவேலு. இவர் படத்தில் பேசிய வசனங்கள் அனைத்தும் தற்போது வரை சோசியல் மீடியாவில் ட்ரண்டாக உள்ளது.

ஏராளமான படங்களில் நடித்த அவருக்கு சில காலம் முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. அதனால் வடிவேலு சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது இந்த தடைகள் எல்லாம் நீங்கி, நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நடிகர் வடிவேலுவுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர் தன் பிள்ளைகள் அனைவருக்கும் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து வைத்தார். அதிலும் அவரது மகன் சுப்பிரமணிக்கு மிகவும் எளிய குடும்பத்தில் இருந்த பெண்ணை மணமுடித்து வைத்தார்.

Subramanian-Cinemapettai.jpg
Subramanian-Cinemapettai.jpg

தற்போது வடிவேலுவின் மகன் சுப்பிரமணிக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்துள்ளது. தன் தந்தையுடன் இணைந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசையாம். மேலும் அவர் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிகிறது.

வடிவேலுவுக்கு சினிமாவில் போட்டிருந்த ரெட் கார்டு தடை விலகி விட்டதால் இனிமேல் தந்தையுடன் இணைந்து நடிக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் இருக்கிறார். மேலும் படங்களில் மட்டும் அல்லாமல் சீரியல்களில் நடிப்பதிலும் சுப்பிரமணி ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர்களின் வாரிசுகள் திரைப்படங்களில் நடிப்பது ஒன்றும் புதிது கிடையாது. அந்த வகையில் வடிவேலுவின் மகனுக்கும் இந்த ஆர்வம் வந்து இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இருப்பினும் தன் தந்தை அளவுக்கு சுப்ரமணி நடிப்பில் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News