சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

வாங்க இங்கிட்டு போதும்!. விஜய் அரசியல் குறித்து வைகைப்புயல் சொன்ன நச் பதில்

Actor Vadivelu’s comment about Vijay’s politics: தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த வைகைப்புயல் வடிவேலு, காமெடி நடிகராக போதெல்லாம் அவருக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. ஆனால் அவர் அரசியல்வாதிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தான் வம்பை இழுத்து வழியில் போட்டுக் கொண்டார்.

அதன் பின் 5 வருடம் சினிமாவில் நடிக்க முடியாமல் முடங்கி கிடந்த வடிவேலும் இப்போது தான் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கிறார். அதுவும் இப்ப எடுபடல. சமீபத்தில் வடிவேலு ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்ய சென்று இருக்கிறார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் என்று குறித்து கருத்து கேட்டு இருக்கின்றனர்.

இதற்கு வடிவேலு அவருடைய பாணியில் கேள்வி கேட்டவரை, ‘வாங்க இங்கிட்டு.. போதும்! என்று நக்கலடித்தார். இவ்வளவு நடந்தும் உங்களுக்கு பத்தலையா! என்று தோரணையில் தான் அவர் பேசியது இருந்தது.

Also Read: தளபதியின் சட்டையை பிடித்து சண்டை போடும் பிரசாந்த்.. GOAT படத்தில் நடந்த மோதல் வீடியோ

நச்சுனு பதில் கொடுத்த வடிவேலு

இருந்தாலும் விடாமல் அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்த செய்தியாளர்களிடம் வடிவேலு நச்சுனு இன்னொரு பதிலையும் கொடுத்தார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் யாரு வேணாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி ஆரம்பிக்கலாம். ஏன் நீங்கள் கூட புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்.

யாரும் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல முடியாது. தமிழ் சினிமாவில் இருந்த நடிகர்களான டி ராஜேந்தர், ராமராஜன், பாக்கியராஜ் எல்லோரும் அரசியலுக்கு வந்தாங்க. அவர்கள் எல்லாம் நல்லது செய்ய தானே வந்தார்கள் என்று கூறியுள்ளார்

Also Read: கேரள அரசியலில் களமிறங்கும் தளபதி விஜய்?. அவசரமாக நடந்த ஆலோசனைக் கூட்டம்

Trending News