திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இங்கிலீஷ் டைட்டில் வச்சா இப்படித்தான் சிக்குவீங்க! விஜய் தலையில் இடியை இறக்கிய வெங்கட் பிரபு

Actor Vijay and director Venkat Prabhu combination GOAT movie title issue: சில நேரங்களில் தமிழ் சினிமாவில் பாடல் என்னுடையது, கதை என்னுடையது, டைட்டில் என்னுடையது என்று கொடிபிடித்து சிலர் வருவதுண்டு. அவர்களை எல்லாம் சமாளித்து சமரசம் செய்து படத்தை  இயக்குனர்கள் திரைக்கு கொண்டு  வருவது என்பது முடவன் மலையேறுவது போல் பெரும்பாடு ஆகிவிடுகிறது.

இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி இல்லை என்றாலும் பலருக்கும் இது பிரச்சினையாவது தான் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இந்த பிரச்சினைக்கு விஜய்யும் விதி விலக்கு அல்ல என்பது போல் விஜய்யின் G.O.A.T படத்திற்கு வந்த சோதனை தான் இது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, லைலா, ஜெயராம், மோகன், பிரசாந்த், பிரபுதேவா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கமாக G.O.A.T என்று தலைப்பிடபட்டு உள்ளனர்.

படம் பாதி நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை, ஹைதராபாத், இலங்கை மற்றும் தாய்லாந்து என வட்டமிட்டு வருகின்றனர் படகுழுவினர்.  டிஜிட்டல் டி ஏ ஜி கான்செப்ட்டை பயன்படுத்தி விஜய் இரு வேடங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களில் முடித்து விடும் நோக்கில்  சூட்டிங் வேகவேகமாக நடைபெற்று வருகிறது.

Also read: வெங்கட் பிரபுவின் கோரத்தாண்டவம்.. விஜய் கொடுக்கும் டார்ச்சரால் ரணகளமாக மாறிய படப்பிடிப்பு

ஜூன் மாதம் பக்ரீத்துக்கு விஜய்யின் கோட் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய பிரச்சனையாக தெலுங்கில் இதே டைட்டிலுடன், ரொமான்ஸ் பிளஸ் காமெடி கலந்த காதல் ஸ்டோரி முடிவடைந்து உள்ளது. தமிழில் பேச்சுலர் படத்தில் நடித்த நாயகி திவ்யபாரதி அறிமுக நாயகியாகவும் மற்றும் தெலுங்கு நடிகர் சுதீர் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

goat-poster
goat-poster

தெலுங்கு இயக்குனர் நரேஷ் G.O.A.T படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் இறங்கி உள்ள போது புத்தாண்டுக்கு வெளியான விஜய் 68 படத்தின் G.O.A.T டைட்டிலை கேட்டு ஆடிப் போய் உள்ளார். மேலும் இயக்குனர் நரேஷ், விஜய்யின் கோட் பட குழுவினரை வன்மையாக சாடி உள்ளார்.

லியோ படத்தின் போதும் இதே போன்ற வேலையை செய்தீர்கள் அதையே G.O.A.T டிலும் தொடர்ந்து வருகிறீர்கள் என்று கூறியுள்ளாராம். ஆனால் வெங்கட் பிரபுவோ, மற்றவர்களோ இதை எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. பாவம் அக்கட தேசத்து இயக்குனர், அவர ஏம்பா டென்ஷன் பண்ணுறிங்க. “செம்மொழி தமிழ்”, உங்களுக்கு தனித்துவமா தமிழ்ல ஒரு டைட்டில் கிடைக்கலையா? பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

Also read: முதலுக்கே மோசம்.. வெங்கட் பிரபு மீது கொல காண்டில் விஜய்

Trending News