செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உதயநிதியிடம் சரணடைந்த வாரிசு.. உச்சகட்ட டென்ஷனில் விஜய்.!

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் பட நிறுவனம் இன்றைய கோலிவுட் சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான அத்தனை ஹிட் படங்களும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடையது தான். பல கோடி கணக்கில் படங்கள் வசூல் செய்கின்றன.ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தேடி சென்று படங்களை விற்பதாக ஒரு பொது மேடையில் உதயநிதியே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் ரெட் ஜெயண்ட் நிறுவனம், நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய துணிவு திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை வாங்கியவுடன் முதல் அப்டேட்டுக்காக நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக பொங்கலை அன்று ரிலீஸ் செய்வதாக அறிவித்தது.

Also Read: துணிவுக்கு பின்னால் இருக்கும் பெரிய பலம்.. வசூலில் பெரிய அடி வாங்க போகும் வாரிசு

இதிலிருந்தே வாரிசு vs துணிவு பொங்கல் சூடு பிடித்தது. வாரிசு படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்வதாக இருந்தது. இந்நிலையில் உதயநிதியின் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி தமிழகத்தின் நிறைய தியேட்டர்களை துணிவு படத்துக்காக வளைத்து போட்டுக் கொண்டார். இதனால் வாரிசு படத்திற்கு மிக குறைந்த அளவே தியேட்டர் கிடைத்தது.

உதயநிதி ஒரு மேடையில் வாரிசு படத்தை தாராளமாக திரையிட நாங்கள் ரெடியாக இருக்கிறோம் என அறிவித்தார். ஆனால் உதயநிதியிடம் வாரிசு பட உரிமையை கொடுத்து விடக்கூடாது என நடிகர் விஜய் ரொம்பவும் கண்டிப்பாக இருந்தார். இதுவே மிகப்பெரிய பிரச்சனையாகவும் வாரிசு திரைப்படத்திற்கு இருந்து வந்தது.

Also Read: வாரிசு அட்வான்ஸ் புக்கிங் எண்ணிக்கையில் பாதி கூட தாண்டாத துணிவு.. உதயநிதிக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி

ஆனால் வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையில் இப்போது வேறு வழியின்றி முக்கியமான நான்கு ஏரியாக்களின் திரையரங்கு உரிமையை இப்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்திருக்கின்றனர். என்ன நடக்கக் கூடாது என்று எண்ணி விஜய் ஆரம்பித்தாரோ அது தற்போது நடந்து விட்டது. இதனால் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார் விஜய்.

வரும் 24 ஆம் தேதி நடக்கவிருக்கும் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் இதற்கான கோபம் வெளிப்படும் மற்றும் அடுத்த படத்தை எடுக்கப்போகும் தயாரிப்பாளர் லலித்தை விஜய் என்ன செய்யப்போகிறார் என்று பொருத்திருந்து பார்க்கலாம். உதயநிதி நினைத்ததை சாதித்துவிட்டார் என்பது தான் நடிகர் விஜய்யின் உச்சகட்ட கோபம்.

Also Read: வாரிசு ஹீரோ முதலில் விஜய் இல்லையாம்.. வாயை விட்டு வம்படியாக மாட்டிக் கொண்ட தில் ராஜு

Trending News