Thalapathy Vijay: தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் பார்வையும் சமீப காலமாக தளபதி விஜய் மீது தான் இருக்கிறது. இதற்கு காரணம் அவர் அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகள் தான். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வந்த நடிகர் விஜய், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு திட்டமாக ஆரம்பித்து வந்தார்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இணைந்து இவர் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா பலதரப்பட்ட சாமானிய மக்களாலும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களாலும் பாராட்டப்பட்டது. அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆழம் பார்த்து வரும் விஜய் முதல் திட்டமாக கையில் எடுத்திருப்பது மாணவர்களுக்கு கல்வி வழங்கும் திட்டத்தில் இருந்து தான்.
கல்வி விருது வழங்கும் விழாவை தொடர்ந்து ஜூலை 15ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பயிலகம் தொடங்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்காக இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த திட்டம் தான் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. விஜய் ஐடியா இல்லாமல் இதையெல்லாம் செய்கிறார் என்ற பேச்சுக்களும் எழுந்து வருகின்றன.
தமிழக அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கும்பொழுது, இப்படி அந்த வகுப்பு மாணவர்களுக்காக இரவு பயிலகம் ஆரம்பிப்பதில் அவசியமே இல்லை என்பதுதான் பலரின் கருத்துக்களாக இருக்கிறது. இந்த வகுப்பு மாணவர்களுக்கு இரவு நேர பாடத்திட்டம் என்பது அவசியமே இல்லை.
Also Read:ரஜினி, அஜித் இணைந்து நடிக்கும் படம்.. விஜய்யை காலி செய்ய சூப்பர் ஸ்டார் போட்ட புது பிளான்
மேலும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கல்வி இடை நிற்றலை தடுப்பதற்காக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து, தன்னார்வலர்கள் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி வழங்கி வருகிறார்கள். மேலும் அரசு தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதில் உதவ வேண்டும் என்று நினைக்கும் விஜய்யின் நல்ல எண்ணம் பாராட்டுதலுக்குரியது தான். ஆனால் அதை எப்படி செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. சினிமாவில் அவருடைய நெருங்கிய நண்பரான சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையின் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார். அவரிடம் இது பற்றி விசாரித்து இருந்தால் கூட அவர் நல்ல ஐடியா கொடுத்திருப்பார். அதைக் கேட்க கூட விஜய்க்கு ஈகோ தடுப்பது போல் தெரிகிறது.