வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பக்கா அரசியல்வாதியா யோசிச்ச விஜய்.. கடுப்பான மக்கள்! பிளான்ன சேஞ்ச் பண்ண சொன்ன தளபதி

Actor Vijay faced problems for taking selfies with fans:“அரசியலுக்கு வந்தாச்சு! ஜெயிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவேன்!” என்று தீவிரமாக, பிறர் வாட பல செயல்களை செய்து, பக்கா அரசியல்வாதியாக மாறியுள்ளார் தளபதி விஜய். “கம்முனு, உம்முன்னு, ஜம்முன்னு” இருந்த நம்ம தளபதிய இந்த அரசியல் எப்படி பாடாய்படுத்தி பஞ்சராக்கி வருகிறது என பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்  தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக G.O.A.T என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது அரசியல் வருகையையும் அதிரடியாக அறிவித்தார் தளபதி.

ஒரு சில படங்களில் நடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மக்கள் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப் போவதாக கூறினார். இதைஅடுத்து  தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படமும், அடுத்து விஜய் நடிக்கும் விஜய் 69 படமும் அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

Also read: ஆந்திராவின் மணிரத்தினத்துக்காக காத்துக் கிடக்கும் விஜய், சூர்யா.. போட்ட முதல்-ஐ காப்பாற்றி கொடுக்கும் இயக்குனர்

தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. தளபதி சூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ரசிகர்களுடன் செல்பி எடுத்து அதை வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கிளப்பியுள்ள நிலையில் இதை வாடிக்கையாக்கினால் என்ன? என்று தனது திட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளார்.

அதாவது நாள்தோறும் இதே போல் 200 விஜய் ரசிகர்களை வரச் சொல்லி செல்பி எடுத்துக் கொள்வது எனவும் அதை பரபரப்பாக்கி செய்தியாக வெளியிட வேண்டும் என்றும் தனது சகாக்களுக்கு கட்டளையிட்டுள்ளார் தளபதி. ஆனால் இந்த கட்டளையை நிறைவேற்ற முடியாமல் பரிதவித்து உள்ளனர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள்.

தளபதியின் இந்த முடிவால் உள்ளூர் மக்கள்,வேலைக்கு செல்வோர்,வணிகர்கள், பணியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதை கேள்விப்பட்டஉடன்  உடனடியாக இதை கேன்சல் செய்து அடுத்த திட்டத்திற்கு தயாராகியுள்ளனர் விஜய் மற்றும் நிர்வாகிகள்.

இது சும்மா ட்ரெய்லர் தான், மெயின் பிரச்சனை விஜய்யின் அடுத்த கட்டபடப் பிடிப்பான இலங்கையில் காத்துக் கொண்டிருக்கிறது. அங்கே இலங்கையின் பெரும்புள்ளிகள் சிலர் விஜய்யை சந்திக்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.  இந்த சந்திப்பு நிகழும் பட்சத்தில்  பின் ஒரு பூகம்பமே வெடிக்கலாம்.

Also read: உனக்கு அரசியல் ஆசை வரவே கூடாதுன்னு தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்யின் 5 படங்கள்.. அப்ப G.O.A.T கசாப்பு கடைக்கு போவது உறுதியா?

Trending News